ETV Bharat / state

தீர்ந்தது காலாண்டு விடுமுறை குழப்பம் - பள்ளிக்கல்வித்துறை விளக்கம் !

author img

By

Published : Sep 17, 2019, 11:10 AM IST

சென்னை: காலாண்டு தேர்வு விடுமுறை ஏற்கனவே அறிவித்தபடி அளிக்கப்படும், காந்தியின் 150 வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவர்கள் விரும்பினால் கலந்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

dpi

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெரும் பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. செப்-23ஆம் தேதி இந்த தேர்வு முடிந்த பின்னர் அக்டோபர் 2ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

ஆனால், மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழாவை, சிறப்பாக கொண்டாடுவதற்கு, வரும் 23 ஆம் தேதி முதல், அக்டோபர் 2ம்தேதி வரை பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடத்த அட்டவணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, காந்தியை மையமாகக் கொண்டு கட்டுரை, நாடகம், பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை ஒவ்வொரு நாளும் நடத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்தாண்டு காலாண்டு விடுமுறை உண்டா இல்லையா என மாணவர்கள்,ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. சமூக வலைத்தளங்களில் விடுமுறை ரத்து என தகவல் பரவியது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் கூறுகையில், பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்தபடி காலாண்டு தேர்வு விடுமுறை உண்டு. பள்ளிகளில் நடைபெறும் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் விருப்பமுள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்கலாம் என்றும் கட்டாயம் கிடையாது, மேலும் காலாண்டு விடுமுறை ரத்து என்பது தவறான தகவல் என்றும் தெரிவித்துள்ளார்.

Intro:காலாண்டு தேர்வு விடுமுறை உண்டு
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Body:காலாண்டு தேர்வு விடுமுறை உண்டு
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை, காலாண்டு தேர்வில் கூடிய விடுமுறை ஏற்கனவே திட்டமிட்டபடி அளிக்கப்படும் எனவும், காந்தியின் 150 வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவர்கள் விரும்பினால் கலந்து கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

காலாண்டு தேர்வு விடுமுறை பட்ட பணியின்போது காந்திஜியின் 150ஆவது ஆண்டு பிறந்த நாள் நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்த வேண்டும் என மத்திய அரசு அறிவிப்பில் தொடர்ந்து ஒருங்கிணைந்த இடைநிலை கல்வி மாநில திட்ட இயக்குனர் சுடலைகண்ணன் சுற்றறிக்கையை அனுப்பி இருந்தார்.
தமிழகம் முழுவதும் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வுகள் கடந்த 12ஆம் தேதி தொடங்கி வரும் 23ம் தேதி வரை நடைபெறுகின்றன. காலாண்டு தேர்வு விடுமுறை 25ஆம் தேதி முதல் அக்டோபர் 3ம் தேதி வரை ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறையால் தயாரிக்கப்பட்டு கால அட்டவணையில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகளை வரும் 23ம் தேதி முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை தொடர்ச்சியாக பள்ளிகளில் கொண்டாட வேண்டும் எனவும், காந்தி மையமாகக் கொண்டு பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டி நாடகம் எனப் பல்வகையான நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை பள்ளிகளில் கொண்டாட வேண்டும் என மாநில திட்ட இயக்குனரகம் தெரிவித்து இருந்தது.

இதனால் இந்தாண்டு காலாண்டு விடுமுறை அளிக்கப்படுமா என்பது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தன.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பனிடம் கேட்டபோது, பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்தது போல் காலாண்டு விடுமுறை திட்டமிட்டபடி அளிக்கப்படும். மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் நிகழ்ச்சிகள் விருப்பமுள்ள மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.