ETV Bharat / state

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது - தகுதியானவர்களை பள்ளிக்கல்வித்துறை பரிந்துரைக்க உத்தரவு

தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதிற்குத் தகுதியானவர்களின் பெயர்ப் பட்டியலை, வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரியர்களுக்கு விருது  அரசு உத்தரவு  சென்னை செய்திகள்  பள்ளிக்கல்வித்துறை  பள்ளிக்கல்வித்துறை ஆணையர்  ராதாகிருஷ்ணன் விருது விவரங்கள்  நல்லாசிரியர் விருது விவரங்கள்  chennai news  chennai latest news  school education  school education director  nominees for radhakrishnan award  school education director asks nominees for radhakrishnan award  radhakrishnan award
ஆசிரியர்களுக்கு விருது
author img

By

Published : Aug 5, 2021, 2:54 PM IST

Updated : Aug 5, 2021, 3:50 PM IST

சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பெயரால் ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தன்று நல்லாசிரியர் விருது தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2020-21ஆம் கல்வியாண்டிற்கு 385 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது.

தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 171 ஆசிரியர்களுக்கும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 171 ஆசிரியர்களுக்கும் என 342 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.

தகுதியுள்ளவர்கள்

மேலும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் மாவட்டத்திற்கு ஒருவர் என 37 ஆசிரியர், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் 2 பேர், சமூகப்பாதுகாப்புத்துறை பள்ளிகளில் 2 பேர், மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் 2 பேர் என மொத்தம் 385 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.

இதற்காக மாவட்ட, மாநில அளவில் குழு அமைத்து ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் விருதிற்கு பரிந்துரைக்கப்படும் அனைத்து வகை ஆசிரியர்களும் குறைந்தது 5 வருடம் பணிபுரிந்திருக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

தகுதியற்றவர்கள்

விருதிற்குப் பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்கள் எவ்விதக் குற்றச்சாட்டிற்கும், ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படாதவராகவும் இருத்தல் வேண்டும். சிறப்பாசிரியர்களையும் விருதிற்கு பரிந்துரைக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் அரசாணையில் கூறியுள்ளார்.

இதையடுத்து கல்வியினை வணிக ரீதியாகக் கருதி செயல்படும் ஆசிரியர்களும், நடத்தை விதிகளுக்கு முரணாக இருக்கும் ஆசிரியர்களும் இந்த விருதிற்கு தகுதியற்றவர்கள்.

மேலும் அரசியலில் பங்குபெற்று, அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களின் பெயர்களை கண்டிப்பாகப் பரிந்துரைக்கக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் கூறியிருந்தார்.

அதன் அடிப்படையில், பள்ளிக்கல்வித்துறை ஆணையர், மாவட்ட அளவில் குழுவினை அமைத்து வரும் 20ஆம் தேதிக்குள் மாவட்டக்கல்வி அலுவலர்கள் பெயர்பட்டியலை பரிந்துரைச் செய்ய வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: 'மக்களை தேடி மருத்துவம்' - பயனாளிகளின் இல்லம் தேடிச் சென்ற ஸ்டாலின்!

Last Updated : Aug 5, 2021, 3:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.