ETV Bharat / state

6, 7, 8ஆம் வகுப்பு மாணவர்களை பெயில் செய்தால்..? - தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை! - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் ஆறு, ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களை பெயில் செய்தால் வரும் பின்விளைவுகளுக்கு பள்ளியின் முதல்வர்கள் அல்லது தலைமை ஆசிரியர்கள்தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும், என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.

ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை
author img

By

Published : Apr 9, 2019, 8:41 AM IST

இது குறித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சென்னைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் சமூக நலத்துறை மெட்ரிக் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆறு,ஏழு,எட்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை விதிமுறைகளைப் பின்பற்றி வெளியிட வேண்டும். தேர்ச்சி அளிப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை தளர்வுச் செய்து வழங்கப்பட்டால், அதற்கு முதன்மைக் கல்வி அலுவலரின் சிறப்பு அனுமதியைப் பெற வேண்டும்.

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் கல்வி மாவட்டத்தில் மட்டுமே மதிப்பெண் பதிவேடு மற்றும் மதிப்பெண் பட்டியலின் நகலை அளிக்க வேண்டும்.
அரசு, அரசு உதவி பெறும் சென்னைப் பள்ளிகள், ஆதி திராவிடர், சமூக நலத்துறை, மெட்ரிக் ஆங்கிலோ, இந்தியன் பள்ளிகள் ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்ச்சி முடிவுகளை மாவட்ட கல்வி அலுவலர் ஒப்புதலைப் பெற்ற பின்னரே வெளியிட வேண்டும்.

அனைத்து அரசு, அரசு உதவி பெறும், சென்னை பள்ளிகள் ,ஆதிதிராவிடர், சமூக நலத்துறை ,மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயம் தேர்ச்சி அளிக்க வேண்டும். இல்லையெனில் பின்னால் வரும் விளைவுகளுக்கு தலைமையாசிரியர்கள் அல்லது முதல்வர்கள் முழு பொறுப்பேற்க வேண்டும். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் கல்வித்துறை அதிகாரிகளின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் மே மாதம் இரண்டாம் தேதி வெளியிட வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு மாவட்ட அளவில் தலைமையாசிரியர்கள் குழு அமைக்கப்பட்டு குறிப்பிட்ட மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களை அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் விதிமுறைகளை மீறியும் எட்டாம் வகுப்பில் பெயில் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் சென்னையில் எல்கேஜி மாணவரை பெயில் செய்தது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அறிவிப்பு தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கையாகவே அமைந்துள்ளது.

Intro:6 ,7 ,8 ம் வகுப்புகளில் பெயில் செய்தால்
விளைவுகளுக்கு தலைமையாசிரியர் முழு பொறுப்பு
பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

Body:சென்னை, 6 7 8ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்களை பெயில் செய்தால் வரும் விளைவுகளுக்கு அந்தப் பள்ளியின் முதல்வர்களோ அல்லது தலைமை ஆசிரியர்கள் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.
சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, அரசு அரசு உதவி பெறும் பள்ளிகள் சென்னைப் பள்ளிகள் ஆதிதிராவிடர் சமூக நலத்துறை மெட்ரிக் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 6, 7,8 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை விதிமுறைகளைப் பின்பற்றி வெளியிட வேண்டும்.
தேர்ச்சி அளிப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட விதி முறைகளை தளர்வுச் செய்து வழங்கப்பட்டால், ஆனால் அதற்கு முதன்மை கல்வி அலுவலரின் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் கல்வி மாவட்டத்தில் மட்டுமே மதிப்பெண் பதிவேடு மற்றும் மதிப்பெண் பட்டியலின் நகலை அளிக்க வேண்டும்.
அரசு ,அரசு உதவி பெறும் ,சென்னைப் பள்ளிகள் ,ஆதி திராவிடர், சமூக நலத்துறை, மெட்ரிக் ஆங்கிலோ ,இந்தியன் பள்ளிகள் 6, 7 ,8 வகுப்பு மாணவர்களுக்கான தேர்ச்சி முடிவுகளை மாவட்ட கல்வி அலுவலர் ஒப்புதலைப் பெற்ற பின்னரே வெளியிட வேண்டும்.
அனைத்து அரசு, அரசு உதவி பெறும் ,சென்னை பள்ளிகள் ,ஆதிதிராவிடர், சமூக நலத்துறை ,மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் 6, 7, 8ம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயம் தேர்ச்சி அளித்தல் வேண்டும். 6 ,7, 8 வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்கவில்லை என்றால் பின்னால் வரும் விளைவுகளுக்கு தலைமையாசிரியர்கள் அல்லது முதல்வர்கள் முழு பொறுப்பேற்க வேண்டும்.
இவர்களுக்கான தேர்வு முடிவுகள் கல்வித்துறை அதிகாரிகளின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் மே மாதம் இரண்டாம் தேதி வெளியிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
ஆறு ஏழு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு மாவட்ட அளவில் தலைமையாசிரியர்கள் குழுக்கள் அமைக்கப்பட்டு குறிப்பிட்ட மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களை அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் விதிமுறைகளை மீறியும் எட்டாம் வகுப்பில் பெயில் செய்து வருகின்றனர்.
சமீபத்தில் சென்னையில் எல்கேஜி மாணவரை செய்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அறிவிப்பு தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கையாகவே அமைந்துள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.