ETV Bharat / state

பள்ளி இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க வேண்டும் - தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

18 வயதிற்கு உள்பட்ட மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறன் மாணவர்கள் பள்ளியில் இடையில் படிப்பிலிருந்து நின்றிருந்தால் அவர்களைக் கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனத் தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

பள்ளி இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க வேண்டும் - தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு
பள்ளி இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க வேண்டும் - தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு
author img

By

Published : Jun 7, 2022, 9:05 AM IST

சென்னை: 18 வயதிற்கு உள்பட்ட மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறன் மாணவர்கள் பள்ளியில் இடையில் நின்றிருந்தால் அவர்களைக் கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனத் தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மேலும் 18 வயதிற்கு உள்பட்ட மாற்றுத்திறனுடைய மாணவர்களைப் பள்ளியில் சேர்ப்பதற்கு வீடு வாரியாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறன் மாணவர்களை மழலையர் பள்ளி, பள்ளி ஆயத்த பள்ளி, நேரடி வகுப்பு பள்ளி, வீட்டு வழி கல்வி மூலம் பயனடைந்து வருகின்றனர்.

பள்ளி இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க
பள்ளி இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க உத்தரவு

ஒவ்வொரு ஆண்டும் 6 முதல் 18 வயது வரை உள்ள பள்ளி செல்லா மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் மாற்றுத்திறன் குழந்தைகளைக் கண்டறியும் வகையில் வருடத்திற்கு மூன்று முறை ஏப்ரல் மே செப்டம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
அதனடிப்படையில் 2022 - 23 ஆம் கல்வி ஆண்டில் மாற்றுத் திறன் குழந்தைகளைக் குடியிருப்பு வாரியாக கண்டறிந்து அவர்களை பள்ளி ஆயத்த பயிற்சி மையங்களில் மூன்று மாதங்களுக்கு பயிற்சி அளித்து அவர்களின் இயலாமை நிலையை பொருத்து அருகாமையில் உள்ள பள்ளிகளில் சேர்த்து இடைநிற்றலைத் தடுத்திட வேண்டும்.

பள்ளிக்கல்வித்துறை
பள்ளிக்கல்வித்துறை

மேலும் இடைநிலைக் கல்வி மற்றும் மேல்நிலை கல்வி தொடரும் வகையில் பள்ளியில் சேர்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்டம் மற்றும் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், இயன்முறை பயிற்றுநர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடைய மற்ற அலுவலர்கள் சேர்ந்து குழு கணக்கெடுப்பு மற்றும் பதிவு புதுப்பித்தல் பணியை செய்து முடிக்க வேண்டும்.

பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளைக் கண்டறிவதற்கான பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து 30 நாள்கள் பள்ளிக்கு வராமல் இருத்தல் மற்றும் அடிக்கடி பள்ளிக்கு வராமல் இருத்தல், பள்ளியிலேயே செல்லாமல் எட்டாம் வகுப்பு முடித்து நிற்பவர்கள் ஆகிய மாணவர்களைக் கண்டறிந்து பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டதை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என அதில் கூறியுள்ளார்

இதையும் படிங்க: கோடை விடுமுறையில் நடத்தும் ‘எண்ணும் எழுத்தும்’ வேண்டாம் - அதிருப்தியில் ஆசிரியர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.