ETV Bharat / state

பள்ளியை மேம்படுத்த முன்னாள் மாணவர்களை அணுகுங்கள்: தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை! - education

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளுக்கான தேவைகளை நிறைவேற்ற முன்னாள் மாணவர்களை தலைமை ஆசிரியர்கள் அணுக வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

School Education dept
பள்ளிக்கல்வித்துறை
author img

By

Published : Mar 14, 2023, 11:10 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளுக்கான தேவைகளை நிறைவேற்ற முன்னாள் மாணவர்களை தலைமை ஆசிரியர்கள் அணுக வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுரை வழங்கி உள்ளது. மேலும் பொதுத் தேர்வினை முடித்துவிட்டு செல்லும் மாணவர்கள் விபரங்களை சேகரித்து தர வேண்டும் எனவும் தலைமை ஆசிரியர்களுக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் மேம்பாட்டிற்காக "நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்" என்ற திட்டம் தொடங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டத்தை துவங்கிய பொழுது பல்வேறு தனியார் நிறுவனங்கள் தங்களின் சமூக பங்களிப்பு நிதியை வழங்கினர். ஆனால் பள்ளிக்கல்வித்துறையின் தேவைக்கேற்ப இந்த திட்டத்திற்கு தற்போது வரை நிதி பெறப்படவில்லை.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை உட்கட்டமைப்பு இல்லாததால் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனை சரி செய்ய தமிழ்நாடு அரசு தகைச்சால்பள்ளிகள், மாதிரி பள்ளிகள் என பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பள்ளிகளுக்கான அறிவிப்பு மட்டுமே வெளிவந்துள்ள நிலையில் அதற்குரிய கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை. ஆனால் இந்த பள்ளிகளை நிர்வகிக்க என ஒரு பெரிய கட்டமைப்பையே உருவாக்கி உள்ளது.

அந்தத் தொகையில் சில இடங்களில் பள்ளி கட்டிடங்களை உருவாக்கி இருக்கலாம். இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை தனது twitter பக்கத்தில் தலைமை ஆசிரியர்களுக்காக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அதில் "வணக்கம்! தலைமையாசிரியராகிய உங்களாலும், பணிபுரியும் ஆசிரியர்களாலும் தான் உங்கள் பள்ளி இயங்குகிறது. நீங்களே உங்கள் பள்ளியின் தூணாக இருக்கிறீர்கள். உங்கள் பள்ளியில் நேற்றைய மாணவர்கள் இறுதியாண்டு முடித்துச் சென்றுவிட்டனர். இன்றிருக்கும் மாணவர்கள் நாளை சென்று விடுவர். ஆனால் நீங்கள் எப்போதும் இருப்பீர்கள்.

  • வணக்கம்!

    தலைமையாசிரியராகிய உங்களாலும், பணிபுரியும் ஆசிரியர்களாலும்தான் உங்கள் பள்ளி இயங்குகிறது. நீங்களே உங்கள் பள்ளியின் தூணாக இருக்கிறீர்கள்.

    உங்கள் பள்ளியில் நேற்றைய மாணவர்கள் இறுதியாண்டு முடித்துச் சென்றுவிட்டனர். இன்றிருக்கும் மாணவர்கள் நாளை சென்று விடுவர்.

    — தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை (@tnschoolsedu) March 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

எனவே பள்ளியின் தொடக்கம் முதல் அதன் வளர்ச்சி வரை பார்த்தவராக நீங்கள் இருக்கக் கூடும். மாணவர்களுக்கு பள்ளியின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒவ்வோர் ஆண்டும் பள்ளியிறுதி முடித்து வெளியேறும் மாணவர்களுக்கு இருக்கும் பள்ளி மீதான பிணைப்பு, பள்ளியிலும் வகுப்பிலும் உடன் படித்த நண்பர்கள் மீதான அன்பு, ஆசிரியர்கள் மீதான மரியாதை, பள்ளியின் வளர்ச்சியில் இருக்கக்கூடிய அக்கறை என ஒவ்வொன்றையும் அறிந்தவர் நீங்கள்தான்.

ஆகவே உங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர்களை ஒன்றிணைப்பது உங்களால் மட்டுமே சாத்தியம். சில மாணவர்கள் உள்ளூரில் இருக்கலாம். சிலர் பெருநகரங்களில் பணியாற்றலாம். வேறு சிலர் வெளிநாடுகளில் இருக்கலாம். எந்த மாணவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்களால் அவர்களை ஒன்றிணைக்க முடியும். ஏற்கனவே முன்னாள் மாணவர்களை இணைத்துக் கொண்டு பள்ளியின் மேம்பாட்டிற்கான செயல்பாடுகள் நடந்திருக்கின்றனவா? இருக்கிறது எனில், உங்கள் அனுபவங்களை பள்ளிக்கல்வித்துறையோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

முன்னாள் மாணவர்களைக் கொண்டு இதுவரை உங்கள் பள்ளிக்கு ஏதேனும் இது வரை செய்யவில்லை எனில், இனி அவர்களோடு இணைந்து பள்ளியின் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க விருப்பத்தோடு இருக்கிறீர்களா?. இதுவரை முன்னாள் மாணவர்களோடு இணைந்து செயல்பட்டிருந்தாலும் இனி செயல்படவிருந்தாலும். கீழ்க்கண்ட சுட்டியை க்ளிக் செய்து அதில் உங்களைப் பற்றியும் பள்ளியைப் பற்றியுமான விவரங்களை forms.gle/YM86p1paLEde2N தாருங்கள்" என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஒடுக்கு பூஜை - குவிந்த பக்தர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.