ETV Bharat / state

சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியருக்கு விருது... - விருது

கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படும் என பள்ளிகல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

School Education Commissioner Nandakumar announced award for the best teacher  School Education Commissioner Nandakuma  award for the best teacher  best teacher  students  Lesson in the best way  chennai news  School Education department meeting  meeting  ஆலோசனை கூட்டம்  பள்ளிக்கல்வித்துறை முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்  பள்ளிக்கல்வித்துறை  சென்னை செய்திகள்  ஆசிரியர்களுக்கு விருது  விருது  chennai latest news
ஆசிரியருக்கு விருது
author img

By

Published : Jul 29, 2021, 12:20 PM IST

சென்னை: பள்ளிக்கல்வித்துறை முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் பேசுகையில், “தொடக்கக் கல்வித்துறையில், 2021-22ம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்திருக்கின்றனர். அதில் உதவி பெறும் பள்ளிகளில் 1,00,000 பேர் சேர்ந்திருக்கின்றனர். இந்த ஆண்டு மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க வேண்டும்.

கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1,125 மாணவர்கள் சேர்ந்து இருக்கின்றனர். அரசு உதவிபெறும் பள்ளிகளில் இந்த வருடம் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள நரிக்கட்டி பள்ளியில் ஒரு ஆசிரியர் மட்டும் 450 மாணவர்களை சேர்த்துள்ளார். பெற்றோர்களை அணுகி மாணவர்களின் எண்ணிகையை உயர்த்தியுள்ளார்.

அதுபோன்று மற்ற மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்கள் பெற்றோர்களை அணுகி மாணவர்களை ஊக்குவித்து சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்தமுடியாத சூழ்நிலையில் அவர்கள் அரசு பள்ளியில் சேர வருகின்றனர். அவ்வாறு வரும் மாணவர்களை அரசு பள்ளியில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

2020-2021ம் கல்வி ஆண்டில் பழங்குடி, பட்டியலின மாணவர்களை அதிகம் சேர்த்த தலைமையாசிரியர்களுக்கான ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

கல்வித் தொலைக்காட்சி வாயிலாக மாணவர்கள் பயனடையும் வகையில் பாடங்கள் நடத்தப்படுகிறது. அது மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைகிறதா என்று அறிய வேண்டும்.

தலைமையாசிரியர்களும், ஆசிரியர்களும் பள்ளி மாணவர்களை வீட்டிற்கு சென்று கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்கள் புரிகிறதா, அவர்கள் ஆர்வமுடன் பார்க்கிறார்களா என்று கவணிக்க வேண்டும்.

மேலும் தொலைக்காட்சியில் எடுக்கப்படும் பாடங்களுக்கு சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்தும், அவ்வாசிரியர்கள் நன்றாக பாடம் கற்பிக்கிறார்களா என்று பார்க்கவேண்டும். கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படும்.

அரசின் அறிவிப்பின்படி மாவட்டத்திலுள்ள அனைத்து ஆசிரியர்களும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: ஆய்வுக்குச்சென்ற மீன்வளத்துறை அலுவலர்களை தடுத்து நிறுத்திய மீனவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.