சென்னை : நாடு முழுவதும் எஸ்பிஐ வங்கிக்கு 22 ஆயிரத்து 224 கிளைகள் உள்ளன. சுமார் 63 ஆயிரம் ஏடிஎம்.,கள் உள்ளது. இந்நிலையில் புதிய திட்டத்தை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின் படி, இனி எஸ்பிஐ வங்கி ஏடிஎம்-இல் ரூபாய் 10 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுப்பவர்கள், பதிவு செய்த மொபைலுக்கு வரும் ஓடிபி எண்ணையும் பதிவிட வேண்டும்.
இந்தத் திட்டத்தின் மூலம், பணம் எடுக்கையில், கார்டை செலுத்தியதும், பின் நம்பரை பதிவிட வேண்டும். அடுத்ததாக, எடுக்க விரும்பும் பணத்தை குறிப்பிட வேண்டும். உடனடியாக வங்கிக் கணக்குடன் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு, ஓடிபி நம்பர் வரும். அந்த ஓடிபி நம்பரை, ஏடிஎம் திரையில் பதிவிட சொல்லும் இடத்தில் சரியாக பதிவிட்டால் மட்டுமே பணத்தை எடுக்க முடியும்.
இதன் மூலம், ஏடிஎம் மையத்தில் நடைபெறும் மோசடியை தடுத்திட முடியும் என வங்கி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க : அதிர்ச்சி.. பாகிஸ்தானுக்கு உளவு.. பொறிக்குள் எலியாக சிக்கிய ஜவான்!