சென்னை: பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் டெபாசிட் (வைப்புத்தொகை) இயந்திங்களைக் குறிவைத்து ஹரியானா மாநில கொள்ளைக்கும்பல் நூதனமுறையில் பணத்தைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றது.
வேளச்சேரி, தரமணி, வளசரவாக்கம், வடபழனி, கீழ்ப்பாக்கம், கோட்டூர்புரம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகளின் ஏடிஎம் வைப்புத்தொகை இயந்திரங்களில் தங்கள் கைவரிசையைக் காட்டி சுமார் 50 லட்சம் ரூபாய் வரை கொள்ளையடித்தனர்.
பின்னர் குற்றவாளிகளைத் தேடி ஹரியானா சென்ற தனிப்படையினர் ஜூன் 23ஆம் தேதி அம்மாநில மேவாட் மாவட்டத்தில் வைத்து அமீர் அர்ஜ் என்பவரைக் கைதுசெய்தனர்.
அமீருக்கு நீதிமன்ற காவல்
கைதான அமீர் நேற்று (ஜூன் 24) விமானம் மூலம் சென்னை அழைத்துவரப்பட்டார். பின்னர், பூந்தமல்லி நீதிமன்ற நீதிபதி இல்லத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, ஜூலை 8ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
இந்நிலையில், அமீர் அர்ஜை ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் இன்று (ஜூன் 25) நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தனர்.
இதையும் படிங்க: எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை வழக்கு: ஹரியானாவைச் சேர்ந்த ஒருவர் கைது!