ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ஆம் தேதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம், சித்ரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு தினம் ஆகியவை கடைப்பிடிக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 25 கோடி பேர் போதைப்பொருள்களுக்கு அடிமையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
சென்னையில் கடந்தாண்டு ஜூன் மாதம்முதல் இந்தாண்டு ஜூன்வரை போதைப்பொருள் பயன்படுத்தியது, கடத்தியது என 25 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேலும் இந்த வழக்குகளில் தொடர்புடையதாக வெளிநாட்டினர் மூவர் உள்பட 43 பேரை கைதுசெய்துள்ளதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பல்வேறு இடங்களில் பயன்படுத்திய, கடத்தியதாக 2000 கிலோவுக்கு மேல் கஞ்சாவை மட்டும் போதைப்பொருள் அலுவலர்கள் பறிமுதல்செய்து 14 குற்றவாளிகளைக் கைதுசெய்துள்ளதாகவும் கூறினர்.
இன்று (ஜூன் 26) நாடு முழுவதும் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் என்பதால் பொதுமக்கள் அனைவரும் போதைப்பொருள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் எனவும் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்றும் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி திரைப்பட நடிகர்களான பாபி சிம்ஹா, சேத்தன், பிரியதர்ஷனி உள்ளிட்டோர் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்திற்காக காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிங்க...'தூங்கி எழுந்ததும் கரோனாவால இன்னொரு சாவு விழுந்துடக் கூடாதுனு மனசு தவிக்குது' - மயான ஊழியர் உருக்கம்