சென்னை: ரெட் ஜெயன்ட் பிக்சர்ஸ் நிறுவனம் விநியோகம் செய்த திரைப்படங்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளித்தது தொடர்பாக அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் ஏற்கனவே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி ஆகிய 3 பேர் மீதும், லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் ஜன.31ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து சவுக்கு சங்கர் அளித்துள்ள புகார் மனுவில், ’முதலமைச்சர் ஸ்டாலின் கீழ்தான் உள்துறை வருகிறது. அவருடைய மகன்தான் ரெட் ஜெயன்ட் பிக்சர்ஸ் நடத்துகிறார்கள். ரெட் ஜெயன்ட் பிக்சர்ஸ் நிறுவனம் ஸ்டாலினுடைய பினாமி நிறுவனம் ஆகும்.
ஸ்டாலின் தன்னுடைய பினாமி நிறுவனத்திற்காக சட்டத்தை வளைத்து அதிகாலை 1 மணி முதல் 4 மணி வரை பல்வேறு சிறப்புக் காட்சிகள் திரையிடுவதற்கு ஜனவரி 11ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையில் அனுமதி அளித்ததன் மூலமாக தனது பினாமி நிறுவனத்திற்கு சிறப்புக் காட்சிகளைத் திரையிட அனுமதி அளித்து அவருடைய மகனுக்கு பல கோடி ரூபாய் லாபம் ஈட்டுவதற்கு ஸ்டாலின் சிறப்புக் காட்சிக்கான உத்தரவை வழங்கியதன் மூலம் உத்தரவிட்டிருக்கிறார். இது லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கக்கூடிய குற்றம் என்பதால் இதன் மீது விசாரணை நடத்த வேண்டும்’ எனக் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து 'முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி ஆகிய 3 பேர் மீதும், லஞ்ச ஒழிப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் கூட்டுச் சதி உள்ளிட்ட குற்றங்களுக்காக அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்துள்ளேன். மேலும், அதற்கான ஆவணங்களையும் இணைத்து தமிழ்நாடு ஆளுநரிடம் புகார் மனுவில் அளித்துள்ளேன்' என அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பள்ளிக்கு கட்.. முருகபக்தர்களிடம் அன்னதானம் வாங்கி உண்டு உறக்கம்: போலீஸை கதறவிட்ட சுட்டி பாய்ஸ்