ETV Bharat / state

அமைச்சர் சிவசங்கர் மீது சவுக்கு சங்கர் ஊழல் புகார்! - today latest news in tamil

Savukku shankar complaint against Minister SS Sivasankar: நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்களில் அரசுப் பேருந்துகளை நிறுத்துவதற்கான டெண்டரில் ஊழல் நடைபெற்றுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மீது சவுக்கு சங்கர் புகார் அளித்துள்ளார்.

savukku shankar complaint against ss sivasankar
அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் லஞ்சம் பெற்றதாக சவுக்கு சங்கர் புகார்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 8:50 AM IST

Updated : Oct 13, 2023, 11:46 AM IST

சவுக்கு சங்கர் செய்தியாளர் சந்திப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வரும் உணவகங்களில் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை நிறுத்துவதற்கு விடப்பட்ட டெண்டரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உள்ளிட்ட நான்கு பேர் மீது சவுக்கு சங்கர், சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சவுக்கு சங்கர், “தமிழக அரசின் போக்குவரத்துத்துறை தமிழ்நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலை உணவகங்களில் பேருந்துகளை நிறுத்துவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் டெண்டர்கள் விடப்படுகிறது.

நெடுஞ்சாலைகளில் உணவகம் வைத்திருப்பவர்கள், போக்குவரத்துக் கழகங்களில் விண்ணப்பம் அளிப்பார்கள். உணவகத்தின் உரிமையாளர்கள் ஒரு பேருந்துக்கு இவ்வளவு கட்டணம் என போக்குவரத்துக் கழகத்திற்கு பணம் கட்டுவார்கள். யார் அதிக கட்டணம் கொடுக்க முன் வருகிறார்களோ, அந்தத் தொகைக்குத்தான் அரசு ஒவ்வொரு ஆண்டும் ஏலம் விட்டுக் கொண்டிருந்தது.

தற்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கக் கூடிய எஸ்.எஸ்.சிவசங்கர் பதவியேற்ற பிறகு, நெடுஞ்சாலை உணவகங்களில் பேருந்துகளை நிறுத்துவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த டெண்டரில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் பொலிட்டிக்கல் பிஏ லூயிஸ் கதிரவன் என்பவரின் பினாமியான வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் மூலம் முறைகேடு நடைபெற்று வருகிறது.

பினாமியான தங்கவேல், ஹோட்டல் உரிமையாளர்களைத் தொடர்பு கொண்டு, உங்களுக்கு டெண்டர் வாங்கித் தருகிறேன் எனக் கூறி, ஒவ்வொரு ஹோட்டல் உரிமையாளர்களிடமும் சென்று, அமைச்சருக்கு ஒரு ஹோட்டலுக்கு ரூ.50,000 கொடுத்தால்தான் டெண்டர் உங்களுக்கு வழங்குவார் எனக் கூறி அனைவரிடமும் பணம் பெற்றுள்ளார்.

இந்த டெண்டர்கள் அனைத்தும் ஈ டெண்டர் ஆகத்தான் கொடுக்க வேண்டும். ஆனால் பினாமியான தங்கவேல், சுமார் 29 ஹோட்டல் உரிமையாளர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு, ஒரே இடத்தில் வைத்து முறைகேடாக டெண்டருக்கு விண்ணப்பித்துள்ளார். ஆகையால், இந்த முறைகேட்டில் ஈடுபட்டு வரும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அவருடைய உதவியாளர் லூயிஸ் கதிரவன், அவருடைய பினாமி தங்கவேல் மற்றும் தங்கவேலுக்கு உதவியாக இருந்த சங்கர் என்பவர் உள்ளிட்ட நான்கு பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுப்பதாகத் தகவல் தெரிவித்திருந்தேன்.

ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி அபாய்குமார் சிங் புகாரை வாங்கவில்லை. தலைமையக டிஎஸ்பியிடம் புகார் கொடுத்துள்ளேன். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நீதிமன்றம் சென்று வழக்கு தொடர்வேன்" என்று கூறினார்.

இதையும் படிங்க: சென்னையில் பூட்டிய வீட்டில் 100 சவரன் தங்க நகை திருட்டு!

Last Updated : Oct 13, 2023, 11:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.