ETV Bharat / state

'அதிமுகவில் உரிமை கோர சசிகலாவிற்கு முகாந்திரம் இல்லை'

அதிமுகவில் உரிமை கோர சசிகலாவிற்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் சார்பில் சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா
சசிகலா
author img

By

Published : Nov 10, 2021, 9:25 PM IST

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

அதில் சசிகலா மற்றும் தினகரனைப் பொதுச்செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் பதவிகளிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை எதிர்த்து சசிகலா தரப்பில் தொடரப்பட்ட வழக்கு சென்னை நான்காவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. சசிகலாவின் வழக்கை நிராகரிக்கக் கோரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்கள் ஏற்கெனவே முடிவடைந்த நிலையில், இன்று (நவ.10) அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டனர்.

சசிகலாவின் தவறான தகவல்கள்

அப்போது, "சசிகலா கட்சியிலிருந்தே நீக்கம் செய்யப்பட்டு, அதனை உச்ச நீதிமன்றமும், டெல்லி உயர் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்ட நிலையில், தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என சசிகலா தவறான தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவித்துவருகிறார்.

அதிமுகவின் முகங்களாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. அது மட்டுமில்லாமல் இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்கி, அவர்கள் தான் உண்மையான அதிமுக என்பதை நிரூபணம் செய்துள்ளது.

உரிமை கோர எந்த முகாந்திரமும் இல்லை

உச்ச நீதிமன்றமே ஏற்றுக்கொண்ட விவகாரத்தில் சசிகலா நேர் எதிரான கோரிக்கையோடு வழக்குத் தொடர்ந்துள்ளார். சசிகலா அதிமுகவிலே இல்லை என்கிற போது கட்சியின் உறுப்பினர்கள் விவரம், சொத்து, வைப்பு நிதி, தலைமை அலுவலகத்தின் சாவி ஆகியவற்றை தன்னிடம் ஒப்படைக்கும்படி கோருவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. அதிமுகவில் உரிமை கோர சசிகலாவிற்கு எந்த முகாந்திரமும் இல்லை" என்று வாதிட்டார்.

இன்றோடு அதிமுக தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், சசிகலா தரப்பு வாதங்களுக்கான வழக்கு விசாரணை வரும் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிய நான்..! - சசிகலா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.