ETV Bharat / state

சரத்குமாரின் சமரன் பூஜையுடன் தொடக்கம்!

நடிகர் சரத்குமார் நடிக்கும் புதிய படம் ’சமரன்’ பூஜையுடன் இன்று தொடங்கியது.

author img

By

Published : Sep 19, 2021, 1:14 PM IST

Updated : Sep 19, 2021, 1:58 PM IST

சரத்குமாரின் சமரன் பூஜையுடன் தொடக்கம்!
சரத்குமாரின் சமரன் பூஜையுடன் தொடக்கம்!

சென்னை: M360°STUDIOS சார்பில் தயாரிப்பாளர் ரோஷ் குமார் தயாரிக்கும், ”சமரன்” என பெயரிடப்பட்ட இப்படத்தின் பூஜை இன்று தொடங்கியது. புதுமுக இயக்குநர் திருமலை பாலுச்சாமி இப்படத்தினை இயக்குகிறார். அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ராமநாதபுரம் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது என கூறியுள்ளார்.

படம் குறித்து M360°STUDIOS சார்பில் தயாரிப்பாளர் ரோஷ் குமார் கூறும்போது, "இந்த கதை முழுக்க, முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் படமாகவும், இந்த காலகட்டத்திற்கு தேவையான கருத்துகளை உணர்த்தும் விதமாகவும் அமைந்துள்ளது. இந்த கதையை இயக்குநர் எழுதி முடித்த பின், இந்த மண் சார்ந்த கதாபாத்திரத்திற்கு, சரியான நபராக எனக்கு தோன்றியது சரத்குமார்தான்.

இயக்குநருக்கும் சரத்குமார்தான் மிகப்பொருத்தமாக இருப்பார் என்றார். நடிகர் சரத்குமார் இந்த கதையை கேட்டவுடன், ஆர்வமாக இது தனக்கான கதையென்று உணர்ந்து உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார்.

இந்த கதையில் முன்னணி நடிகையாக வலம் வந்த மண்ணின் மகளாக, மீனாட்சி எனும் ஒரு முதன்மை கதாபாத்திரத்தில், சுஹாசினி மணிரத்னம் நடிக்கிறார். இயக்குநர் திருமலை பாலுச்சாமி இந்த கதையை மிக நேர்த்தியாகவும், இதுவரை மக்களுக்கு சொல்லபடாத விஷயத்தை சொல்லும் விதமாகவும் அமைத்துள்ளார். இப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும் ஒரு சிறந்த திரைப்படமாக இருக்கும் எனும் நம்பிக்கை உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

சமரன்
சமரன்

இப்படத்தில் சரத்குமார் நாயகனாக நடிக்க, அஸ்வதி நாயகியாக நடிக்கிறார். நந்தா, சுஹாசினி, சிங்கம் புலி, சித்திக், கஞ்சா கருப்பு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வேத்சங்கர் சுகவனம் இசையமைக்கிறார்.

தொரட்டி படத்தின் ஒளிப்பதிவாளர் குமார் ஶ்ரீதர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை செய்கிறார். சண்டை பயிற்சி விக்கி வினோத்குமார் செய்ய, கலை இயக்கத்தை ஶ்ரீமன் பாலாஜி ஆகியோர் கவனிக்கின்றனர்.

இதையும் படிங்க: முடிவடைந்த பொன்னியின் செல்வன் முதல் பாகம்..!

Last Updated : Sep 19, 2021, 1:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.