சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து, நடிகர் விஜய், அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா போன்ற ஏராளமான நட்சத்திரப் பட்டாளங்களோடு லியோ படமானது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் இன்று காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் லியோ திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், வெற்றி திரையரங்கில் நேற்று இரவு வரை திரைப்படத்தின் முன்பதிவானது தொடங்கப்படாமல் இருந்தது. திரையரங்கத்தின் உரிமையாளர் ராகேஷ் கௌதமன் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதால் முன்பதிவு தொடங்குவதில் தாமதம் நிலவுதாக பதிவிட்டு இருந்தார். இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாகினர்.
இந்நிலையில், டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் திரைப்படத்தை எப்படியாவது கண்டு விட வேண்டும் என ஆவலோடு இருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டவர்கள், வெற்றி திரையரங்க வாசலிலேயே ரூபாய் 1,500 முதல் 2,000 வரை விலை வைத்து விற்றுக் கொண்டிருந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.
இதில் ஒரு டிக்கெட் விலை 3,000 அல்லது 2,000 ரூபாய் வரை கூறப்படுகிறது. அதன் பிறகு பேரம் பேசி சுமார் 1,500 ரூபாய் வரை ஒரு டிக்கெட் விற்பனை செய்து வருவதாக அங்கு இருந்த விஜய் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் மண் சரிந்து குழியில் சிக்கிய 4 புலம்பெயர் தொழிலாளர்கள் மீட்பு - தனிப்படை போலீசாருக்கு பாராட்டு!