ETV Bharat / state

ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா செல்போன் தொழிற்சாலையை வாங்கிய பிரபல நிறுவனம்!

author img

By

Published : Nov 27, 2019, 1:21 PM IST

சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா நிறுவனத்தின் செல்போன் உற்பத்தி தொழிற்சாலையை ஃபின்லாந்தைச் சேர்ந்த சால்காம்ப் நிறுவனம் வாங்க உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது.

nokia plant
நோக்கியா

நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் விற்பனை செய்தது மட்டுமின்றி வரி பிரச்சனை காரணமாக, ஸ்ரீபெரும்புதூரில் இயங்கிய நோக்கியா செல்போன் உற்பத்தி தொழிற்சாலை கடந்த 2014 ஆம் ஆண்டு மூடப்பட்டது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிட்டது.

இந்நிலையில், ஆப்பிள், ஜியோமி, ஓப்போ, விவோ, ஃபாக்ஸ்கான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு செல்போன் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் ஃபின்லாந்தைச் சேர்ந்த சால்காம்ப் நிறுவனம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா தொழிற்சாலையை வாங்க அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த தொழிற்சாலை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் செயல்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், 10 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சால்காம்ப் நிறுவனம், இங்கு செல்போன்களுக்கான சார்ஜரை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் 1,300 கோடி ரூபாய் முதலீடு செய்யும் என்று கூறப்படுகிறது. இந்நிறுவனம், தமிழ்நாடு அரசின் இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநாட்டில், நோக்கியா டெலிகாம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 5,600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் வகையில் 500 கோடி ரூபாய் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது.

இதையும் படிங்க: சுவற்றில் துளையிட்டு ரூ.70ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருட்டு!

Intro:Body:சென்னை:

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா நிறுவனத்தின் செல்போன் உற்பத்தி தொழிற்சாலையை ஃபின்லாந்தைச் சேர்ந்த சால்காம்ப் நிறுவனம் வாங்க உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது.

நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் விற்பனை செய்தது மற்றும் வரி பிரச்னை காரணமாக ஸ்ரீபெரும்புதூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள நோக்கியா செல்போன் உற்பத்தி தொழிற்சாலை கடந்த 2014 மூடப்பட்டது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் தங்களது வேலையை இழந்தனர். இந்த நிலையில், ஆப்பிள், ஜியோமி, ஓப்போ, விவோ, ஃபாக்ஸ்கான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு செல்போன் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் ஃபின்லாந்தைச் சேர்ந்த பிரபல சால்காம்ப் நிறுவனம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா தொழிற்சாலையை வாங்க அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. சால்காம்ப் நிறுவனத்தின் மற்ற உற்பத்தி ஆலைகளில் இதுவரை 7 ஆயிரம் பேர் வரை பணியாற்றி வரும் நிலையில், இந்த தொழிற்சாலை மூலமாக கூடுதலாக 10 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த தொழிற்சாலை செயல்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சால்காம்ப் நிறுவனம், இங்கு செல்போன்களுக்கான சார்ஜரை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் 1,300 கோடி ரூபாய் முதலீடு செய்யும் என்றும் கூறப்படுகிறது. இந்நிறுவனம், தமிழக அரசின் இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநாட்டில், நோக்கியா டெலிகாம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 5, 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் வகையில் 500 கோடி ரூபாய் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சீன- அமெரிக்க வர்த்த்கப் போரின் காரணமாக ஏராளமான நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறி வருகின்றன. இதன் காரணமாகவே சால்காம்ப் நிறுவனம் இந்தியா நோக்கி தனது கவனத்தை திருப்பி உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் உற்பத்தி செய்து உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், அதன் உதிரிபாக உற்பத்தி நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தியை அதிகரித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. Conclusion:use file photo

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.