சென்னை: பிரபல வரலாற்றுப் புதின எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான கோவி. மணிசேகரன் காலமானார். 1992இல் அவர் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றார்.
கோவி. மணிசேகரன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துலகில் உள்ளார். இவர் 8 நாடகங்கள், 29 சிறுகதைத் தொகுப்புகள், 30 சமூகப் புதினங்கள், 50 வரலாற்றுப் புதினங்கள், 8 கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.
![கோவி. மணிசேகரன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13668716_k-2.jpg)
இவரது வரலாற்றுப் புதினங்கள் இவருக்குப் பெயர் பெற்றுத் தந்தன. 1992ஆம் ஆண்டு இவரது வரலாற்றுப் புதினமான குற்றாலக் குறவஞ்சி தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது.
![கலைகள் கருணாநிதியுடன் கோவி. மணிசேகரன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13668716_k-3.jpg)
இவர் இரண்டு தமிழ் மற்றும் ஒரு கன்னட திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தரிடம் 21 ஆண்டு காலம் இவர் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார்.
![எம்எஸ்வியுடன் கோவி. மணிசேகரன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13668716_kovi-mani.jpg)
இவர் இயக்கிய தென்னங்கீற்று என்ற தமிழ்த்திரைப்படம், தமிழக ரசிகர்மன்ற விருதும் கர்நாடக அரசின் நீரிக்ஷே விருதும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.