ETV Bharat / state

என்.எல்.சி விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதியை மத்தியஸ்தராக நியமிக்க உயர் நீதிமன்றம் முடிவு!

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்திற்கு அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் மத்தியில் நிலவும் விவகாரத்திற்குத் தீர்வு காண ஓய்வுபெற்ற நீதிபதி வி. ராமசுப்ரமணியத்தை நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

என்.எல்.சி விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் முடிவு

author img

By

Published : Aug 8, 2023, 9:41 PM IST

சென்னை: என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்களுடனான ஊதிய உயர்வு விவகாரத்தில் தீர்வுகாண உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வி.ராமசுப்ரமணியத்தை மத்தியஸ்தராக நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. என்.எல்.சி.-யில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் நடத்திவரும் வேலைநிறுத்த போராட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரியும், பணிக்கு வரும் ஊழியர்களுக்கும், என்.எல்.சி. நிறுவனத்திற்கும் பாதுகாப்பு வழங்கக் கோரியும், தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவதை தடுக்கக் கோரியும் என்.எல்.சி. தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம். தண்டபாணி போராட்டம் நடத்துவதற்கான இடங்களை நிர்ணயித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கடலூர் மாவட்ட எஸ்.பி.-க்கு உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, போராட்டம் நடத்துவதற்கான இடங்கள் குறிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த இடங்களில் தான் தற்போது போராட்டம் நடைபெற்று வருவதாகவும் என்.எல்.சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அந்த இடங்கள் குறித்த அறிக்கையை மாவட்ட எஸ்.பி. தாக்கல் செய்யவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி, போராட்டம் நடத்த அனுமதிக்கும் வகையில் குறிக்கப்பட்ட இடங்களை ஆகஸ்ட் 11ஆம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய கடலூர் மாவட்ட எஸ்.பி.க்கு உத்தரவிட்டார். மேலும் தவறும்பட்சத்தில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்துள்ளார்.

மேலும், என்.எல்.சி நிறுவனத்திற்கும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இடையேயான ஊதிய உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வி.ராமசுப்ரமணியத்தை நியமிக்க இருப்பதாக நீதிபதி தண்டபாணி தெரிவித்தார். ஆனால் என்.எல்.சி தரப்பில் தொழில் தகராறுகள் சட்டத்தின் படி பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண அதிகாரி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி, அவர் பேச்சுவார்த்தை நடத்தியதில் எந்தப் பயனும் இதுவரை இல்லை என குறிப்பிட்டதுடன், இந்த விவகாரத்தில் என்.எல்.சி. நிறுவனம் தீர்வுகாண விரும்புகிறதா? அல்லது பிரச்னையை மேலும் வளர்க்க விரும்புகிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து நீதிபதி ராமசுப்ரமணியத்தை நியமிப்பது தொடர்பாக இரு தரப்பும் கலந்தாலோசித்து, முடிவெடுத்து ஆகஸ்ட் 11ஆம் தேதியன்றே தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையைத் தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: chennai metro rail: மாதவரத்தில் 1.4 கி.மீ., சுரங்கப்பாதை தோண்டும் பணியை முடித்தது நீலகிரி இயந்திரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.