இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் குடிமராமத்து திட்டம் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் ஆண்டுவாரியாக பணிகள் நடைபெற நிதிகள் ஒதுக்கப்படுகின்றன. அதன்படி 2020-21ஆம் ஆண்டில் 34 மாவட்டங்களில் 1,387 குடிமராமத்துப் பணிகளுக்கு ரூ.500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை மண்டலத்தில் ரூ.155 கோடி ரூபாய் மதிப்பில் 377 பணிகளும், திருச்சி மண்டலத்தில் ரூ.140 கோடி ரூபாய் மதிப்பில் 458 பணிகளும், மதுரை மண்டலத்தில் ரூ.156 கோடி மதிப்பில் 306 பணிகளும், கோயம்புத்தூர் மண்டலத்தில் ரூ.45 கோடி மதிப்பில் 246 பணிகளும் நடைபெற இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டள்ளது.
இதையும் படிங்க: மே 3ஆம் தேதிக்கு பின் எந்தெந்த பணிகளை மேற்கொள்ளலாம் - தமிழ்நாடு அரசு ஆணை