ETV Bharat / state

மருத்துவர் உமாசங்கர் வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்ற வேண்டும்: ஆர்.எஸ்.பாரதி!

சென்னை: கோவை மருத்துவர் உமாசங்கர் விபத்தில் மரணமடைந்தது குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்திட வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை விடுத்துள்ளார்.

CBCID probe into the death of Coimbatore doctor Umashankar in an accident  மருத்துவர் உமாசங்கர் வழக்கு  doctor Umashankar accident case  RS Bharathi Demanding doctor Umashankar accident case Transfer to CBCID  RS Bharathi Demanding doctor Umashankar accident case  மருத்துவர் உமாசங்கர் வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்ற ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை  ஆர்.எஸ்.பாரதி
RS Bharathi Demanding doctor Umashankar accident case
author img

By

Published : Jan 25, 2021, 9:36 PM IST

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, "கோவை காந்திபுரத்தில் உள்ள 'சென்னை மருத்துவமனை'யின் நிர்வாக இயக்குநர் உமாசங்கர், கூலிப்படையினரால் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டார். கடந்த 23ஆம் தேதி மதியம் கோவை துடியலூர் கண்ணப்பநகர் பகுதியில் நடந்து சென்ற போது கார் மோதி விபத்தில் உயிரிழந்தார்.

இச்சம்பவம் நடைபெற்ற தினத்தன்று அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்கள் வேலை செய்யவில்லை. ஆகவே மருத்துவர் உமாசங்கர் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று நெல்லை - தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது விபத்துதானா என்ற பெரும் சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

இந்த மருத்துவமனை விவகாரத்தில் “வாடகை பாக்கிக்காக” கொடுத்த புகாரில் மருத்துவர் உமாசங்கரை மின்னல் வேகத்தில் கைது செய்ய உத்தரவிட்டவர்கள் யார்? பிணையில் வெளிவந்து காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்த அவர் எப்படி விபத்து நேர்ந்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதில் உள்ள மர்மம் என்ன? இந்த ஒட்டுமொத்த மருத்துவமனை விவகாரத்தில், அதிமுக அமைச்சர் ஒருவருக்கு தொடர்பு உள்ளது என்று வரும் செய்திகளையும் புறக்கணித்துவிட முடியாது.

இந்நிலையில், மருத்துவர் உமாசங்கர் மரணமடைந்தது குறித்து கோவை மாநகர காவல் துறை விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வராது. ஆகவே, இந்த வழக்கை உடனடியாக சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி நியாயமான விசாரணை நடத்திட வேண்டும் என்று முதலமைச்சர் பழனிச்சாமியை கேட்டுக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சென்னை மருத்துவமனையின் தலைவர் உமாசங்கர் உயிரிழப்பு: காவல் துறை விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.