ETV Bharat / state

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.61 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்!

author img

By

Published : Jun 24, 2022, 5:38 PM IST

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகளை சோதனை செய்தபோது சட்டை மற்றும் பைக்குள் மறைத்து எடுத்து வந்த ரூ.61 லட்சம் ஹவாலா பணத்தை ரயில்வே பாதுகாப்புப் படை காவல் துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்

சென்னை: ஒடிசா மாநிலம், புபனேஸ்வரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இன்று (ஜூன் 24) காலை விரைவு ரயில் வந்தது. சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடை 4-க்கிற்கு வந்தபோது சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்புப் படை காவல் துறையினர் பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர்.

அப்போது ஆந்திரா ராஜமுந்திரி மாவட்டத்தைச் சேர்ந்த அகுலா சாய்கிருஷ்ணா (27) என்பவரின் பை மற்றும் சட்டையை காவல் துறையினர் சோதனை செய்தனர். அதில், பையில் 42 லட்சம் ரூபாய் மற்றும் சட்டைக்குள் மறைத்து 19 லட்சம் ரூபாய் என மொத்தம் 61 லட்சம் ரூபாய் வைத்து இருந்தது தெரிய வந்தது.

இதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை எனவும் தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே பாதுகாப்புப் படை காவல் துறையினர் ரூ. 61 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் சாய்கிருஷ்ணா ராஜமுந்திரி பகுதியிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு பயணம் செய்வதாகவும், ஆனால் அவர் விஜயவாடாவிலிருந்து சென்னைக்கு டிக்கெட் எடுத்திருப்பதை காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.

பின்னர் ரயில்வே பாதுகாப்புப்படை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று சாய் கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தியதில், நகை வாங்குவதற்காக பணத்தை கொண்டு வந்ததாகவும், பணத்தைக் கொண்டு வந்து சென்னையில் ஒப்படைத்தால் 10 ஆயிரம் ரூபாய் கமிஷனாக கிடைக்கும் என விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சாய் கிருஷ்ணா, அவர் எடுத்து வந்த பணத்தை ரயில்வே பாதுகாப்புப் படை காவல்துறையினர் வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த ரயில்வே பாதுகாப்புப் படை டிஎஸ்பி ராஜூ, " ரயிலில் ஹவாலா பணம் மற்றும் மதுபானங்களை கடத்தி வருவோரை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கணக்கில் வராத 1 கோடியே 85 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எங்கிருந்து பணத்தை கொண்டு வருகிறார்கள் எனத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.61 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

இதையும் படிங்க: சென்னையில் போதைப்பொருள் சோதனையில் ரூ.2 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.