சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, சென்னை அடுத்த தாம்பரம் அருகேயுள்ள பூவிருந்தவல்லி பைபாஸ் சாலை, வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் அலுவலர்கள் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
![தேர்தல் அலுவலர்களின் தீவிர வாகன தணிக்கை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-seizureofmoneyduringvehicleinspection-visual-script-7208368_05032021133622_0503f_1614931582_48.png)
இந்நிலையில், மேற்கு தாம்பரம் தர்காஸ் அருகே சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தப் போது, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் காரில் சோதனையிட்டனர்.
அப்போது, காரில் இருந்து முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 4 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. உடனே அவரை கைது செய்த அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க; புடவையில் அமைச்சர் படம்: பறிமுதல் செய்த பறக்கும் படை