இது குறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், "ஊரகப் பகுதிகளில் போக்குவரத்தினை மேம்படுத்திடவும், நீர்நிலைகளை கடந்திட ஏதுவாகவும் பாலங்களை கட்ட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 700 குறு பாலங்கள், 250 சிறு பாலங்கள், 100 தரைப்பாலங்கள் கட்டப்பட உள்ளது.
இந்த பாலங்கள் கட்டுவதற்கான பணியாளர்களுக்கான ஊதியத்தினை மத்திய அரசு வழங்கும். கட்டுமானப் பொருட்களுக்கு ஆகும் செலவில் 75 விழுக்காடு மத்திய அரசும், 25 விழுக்காடு மாநில அரசும் கொடுக்கும். மொத்தமாக ஆயிரத்து 50 பாலங்கள் கட்ட மொத்த தொகையான ரூ.146 கோடியே 78 லட்சத்தில், 114 கோடியே 12 லட்ச ரூபாயை மத்திய அரசு வழங்கும். மீதமுள்ள ரூ.32 கோடியே 66 லட்சத்தை மாநில அரசும் வழங்கும்" என குறிப்பிடப்பட்டுள்ளது
.