ETV Bharat / state

ஊரடங்கு விதி மீறல் :  11 கோடியை கடந்த அபராதத் தொகை!

சென்னை : ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்களிடமிருந்து இதுவரை 11 கோடி ரூபாய்க்கும் மேல் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

TN police latest news
Traffic violation during Curfew
author img

By

Published : Jun 9, 2020, 12:56 PM IST

கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொது மக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டது.

இந்தத் தடை உத்தரவை மீறுபவர்களை கண்காணித்து, தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த 77 நாட்களில், விதிகளை மீறிய ஆறு லட்சத்து நான்காயிரத்து 769 பேரை காவல் துறையினர் கைது செய்து, பிணையில் விடுவித்துள்ளனர்.

மொத்தம் நான்கு லட்சத்து 57 ஆயிரத்து 641 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இவர்களிடமிருந்து மொத்தம் 11 கோடியே 13 லட்சத்து 25 ஆயிரத்து 154 ரூபாய் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.