ETV Bharat / state

எண்ணூரில் ரவுடி கொலை செய்யப்பட்ட விவகாரம் - ஏழு பேர் கைது - Ennore

சென்னை : எண்ணூர் பகுதியில் ரவுடியைக் கொலை செய்த வழக்கில் ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

எண்ணூரில் ரவுடி கொலை
எண்ணூரில் ரவுடி கொலை
author img

By

Published : Sep 19, 2020, 12:36 PM IST

சென்னை மாவட்டம், எண்ணூர் தாழங்குப்பம் 22ஆவது பிளாக்கைச் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 29). இவருக்கு மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். ராஜசேகர் மீது காசிமேடு, மீன்பிடி துறைமுகம், எண்ணூர் ஆகிய காவல் நிலையங்களில் வழிப்பறி, கொலை முயற்சி வழக்குகள் இருந்த நிலையில், குற்ற வழக்கில் கைதான அவர், சமீபத்தில் சிறையிலிருந்து வெளிவந்துள்ளார்.

இந்நிலையில், கத்திவாக்கம், பக்கிம்காம் கால்வாய் அருகே நேற்று முன் தினம் (செப்.17) மாலை நண்பர்கள் ஐந்து பேருடன் ராஜசேகர் மது அருந்தியுள்ளார். அப்போது, அங்கு ஏற்பட்ட தகராறில் ராஜசேகரை அந்தக் கும்பல் ஓட ஓட வெட்டிக் கொலை செய்தது.

இதைத் தொடர்ந்து எண்ணூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ராஜசேகரது உடலைக் கைப்பற்றி, கொலையில் ஈடுபட்ட திருவொற்றியூர் கார்கில் நகரைச் சேர்ந்த கார்த்திக் (எ) புறா கார்த்திக் (வயது 23), அத்திப்பட்டு, புது நகரைச் சேர்ந்த அப்துல் கரிம் (எ) கரிம் (வயது 22) மீஞ்சூரைச் சேர்ந்த சதீஸ்குமார் (எ) குட்டா குசுமி (வயது 20) எண்ணூர், வ.உ.சி நகரைச் சேர்ந்த அஜித் (வயது 22), ஜாகீர் உசேன் (எ) ஜாக்கி (வயது 20), தண்டையார் பேட்டை, சிவாஜி நகரைச் சேர்ந்த சூர்யா (வயது 24) அரிஸ் (வயது 22) ஆகிய ஏழு பேரைக் கைது செய்தனர்.

ஏற்கனவே கார்த்திக்குக்கும் ராஜசேகருக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில், கஞ்சா கேட்டு மிரட்டிய ராஜசேகர், அவர்களை ஆபாசமாகப் பேசியதால் ஆத்திரத்தில் அவரைக் கொன்றதாக கைதானவர்கள் காவல் துறையினரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: மனைவி கணவன் அடுத்தடுத்து தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.