சென்னை வில்லிவாக்கம் அடுத்த கொய்யாத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி போண்டா பாலாஜி (27). இவர் மீது கொலை முயற்சி, வழிப்பறி, அடித்தடி உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
அம்பத்தூர் அருகே உள்ள தனது மாமியார் வீட்டிற்கு ரவுடி பாலாஜி, தம்பி சீனிவாசன் உடன் சென்றார். பின்னர் வெளியே தனியாகவந்த ரவுடி பாலாஜியிடம் நேற்று (நவ. 15) இரவு 9.30 மணிக்கு ஐந்து பேர் கொண்ட கும்பல் தகராறில் ஈடுபட்டனர். அப்போது கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு ரவுடி பாலாஜியை வெட்டி சாய்த்து விட்டு தப்பிச் சென்றனர்.
ரத்த வெள்ளத்தல் கீழேவிழுந்த ரவுடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அம்பத்தூர் துணை ஆணையர் தீபா சத்யன் அறிவுறுத்தலின்படி இரண்டு உதவியாளர்கள் மூன்று காவலர்கள் என ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டது. இச்சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் சதீஷ், விஜய், சரண், ஆனந்த் உள்ளிட்ட ஐந்து குற்றவாளிகளையும் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
விசாரணையில், "சதீஷ் என்பவர் குடிபோதையில் தனது ஆட்டோவில் தூங்கியுள்ளார். அப்போது அவரது கழுத்தில் இருந்த தங்கச் செயின் திருடுபோயுள்ளது. ரவுடி பாலாஜி தம்பி சீனிவாசன் மீது சதீஷூக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் கேட்டுள்ளார்.
அதற்கு ரவுடி சதீஷை கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன சதீஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து ரவுடி பாலாஜியை வெட்டிக் கொன்றார்" என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: காவல் ஆய்வாளர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துக்கொண்ட ரவுடி