சென்னை மயிலாப்பூர் சண்முகம் பிள்ளை தெருவில் வசித்து வருபவர் குமாரி(29). இவர் கடந்த 15ஆம் தேதி தனது குடும்பத்துடன் அப்பகுதியில் நடந்த கோயில் திருவிழாவில் கலந்துகொண்டார். அப்போது கோயில் தர்மகர்த்தாவின் செல்போன் காணாமல் போனது. குமாரியின் உறவினர் மகன் திருடியதாகக் கூறி சிவகுமாரின் உறவினரான சாந்தி, தேவி உள்பட பலர் இணைந்து பிரேம் என்பவரை தாக்கினர்.
இது குறித்து குமாரி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில், நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 16) மீண்டும் குமாரியின் வீட்டிற்குள் புகுந்த சாந்தி, ரஜினி, வினோத் உள்ளிட்ட எட்டு பேர் குமாரியை சரமாரியாக தாக்கிவிட்டு ஏரியாவை விட்டு காலி செய்ய வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது
இதையடுத்து, குமாரி, ரவுடி சிவகுமாரின் உறவினரான சாந்தி அப்பகுதியில் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்து வருவதாகவும், ரவுடிகளை வைத்து அராஜகம் செய்து வருவதாக காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதனால், கோபமடைந்த சாந்தியின் கூட்டாளிகள் ஐந்து பேர் குமாரியின் வீட்டின் கூரையில் தீ வைத்து தப்பிச் சென்றனர். இதில், வீட்டிலிருந்த, புடவை, ஆதார் கார்டு, உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமானது.
இச்சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருந்த சாந்தி, அய்யனார், அரவிந்தன், தமிழரசன், வினோத், கோபி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து ஆறு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி சிவகுமாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: 13 வயது சிறுவன் உருவாக்கியுள்ள அட்டகாசமான செயலி!