ETV Bharat / state

சென்னையில் 2 நாட்கள் பெய்த மழைக்கு சேதமடைந்த சாலைகள்.. மாநகராட்சி ஆணையர் அளித்த விளக்கம்?

சென்னை அம்பத்தூர், ஆவடி, அயப்பாக்கம் போன்ற பகுதிகளிலிருந்து அண்ணாநகர், நுங்கம்பாக்கம், கிண்டி கோயம்பேடு, போரூர் சாலைகள் அதிமுக ஆட்சியிலிருந்தே தற்போது திமுக ஆட்சி வரை குண்டும் குழியுமாகவே காணப்படுகின்றது என அம்பத்தூர் பகுதியில் வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

Roads damaged by rains in Chennai are suffering for motorists
சென்னையில் 2 நாட்கள் பெய்த மழைக்கு சேதமடைந்த சாலைகள்..!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2023, 8:31 PM IST

Updated : Nov 16, 2023, 10:14 AM IST

சென்னை: வடகிழக்கு பருவமழை பரவலாகப் பெய்து வரும் நிலையில் 2- நாட்கள் பெய்த மழைக்கே சென்னை நகரில் உள்ள பல சாலைகள் சேதமடைந்துள்ளது.

சென்னையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கிப் பரவலாகப் பெய்து வருகிறது. சென்னையில் சென்ற வாரங்களில் விட்டு விட்டு மழை வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து மழையானது பெய்தது. இரண்டு நாள் மழைக்கே சென்னையில் பல இடங்களில் சாலைகள் சேதம் அடைந்துள்ளன. இதனால் சாலைகள் குண்டும் குழியுமாகக் காணப்படுகின்றன. அந்த பகுதிகளில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.

  • Chennai rains has severely damaged the roads! The roads has been damaged due to cheap laying. We pay Road tax when there is no proper roads ? Are u seeing this mayor madam ?? @chennaicorp pic.twitter.com/Uln3DfF3RC

    — Alisha abdullah (@alishaabdullah) November 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

சென்னை மற்றும் அதன் புறநகரில் மழையால் பல சாலைகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாகத் தாம்பரம்- வேளச்சேரி பிரதான சாலை, தாம்பரம் முடிச்சூர் சாலை, அசோக் நகரில் உள்ள டாக்டர் நடேசன் சாலையில் மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துள்ளன. அதன் பிறகு சாலை குண்டும் குழியுமாக மாறிவிட்டது. அம்பத்தூர் தொழிற்பேட்டை 1-ஆவது பிரதான சாலை, மூன்றாவது பிரதான சாலை, பட்டரவாக்கம் சாலை, அதிப்பட்டு சாலை, போன்ற சாலைகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அம்பத்தூர் பகுதியில் வாகன ஓட்டிகள் தெரிவித்தது, "அம்பத்தூர், ஆவடி, அயப்பாக்கம் போன்ற பகுதிகளிலிருந்து அண்ணாநகர், நுங்கம்பாக்கம், கிண்டி கோயம்பேடு, போரூர் செல்ல இந்த சாலையைத் தான் பயன்படுத்துவோம். தற்போது, மழையால் இந்த சாலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், குண்டும் குழியுமாக இருப்பதால், சாலையில் வாகனம் ஓட்டுவதற்கு சிரமமாக உள்ளது. கடந்த, அதிமுக ஆட்சியிலிருந்தே இந்த சாலைகளில் பிரச்சனைகள் இருந்தது தற்போது திமுக ஆட்சியிலும் தொடர்ந்து வருகிறது. பேருக்கு என்று சாலைகள் போடப்பட்டு வருகிறது. இரண்டு நாள் மழைக்கே சாலைகள் சில பகுதிகள் மிகவும் மோசமடைந்துள்ளதாக தெரிவித்தார்கள்.

பா.ஐ.க விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு மாநிலச் செயலாளர் அலிஷா அப்துல்லா தனது X பக்கத்தில், "சென்னையில் மழையால் சாலைகள் சேதமடைந்துள்ளது. சாலைகள் அனைத்தும் தரமற்றதாக போடப்பட்டு வருகிறது. நாங்கள் வரி கட்டுகிறோம். ஏன் சாலைகள் தரமாக இருப்பது இல்லை. மேயர் அவர்களுக்கு இதெல்லாம் தெரிகிறதா?" என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

இது குறித்து மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறுகையில், “சென்னை மாநகராட்சி தொடர்ந்து பெய்யும் மழையினை எதிர்கொள்ளும் வகையில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளது. பொதுமக்களிடமிருந்து வரும் மழை நீர்த்தேக்கம், மழையினால் பாதிக்கப்பட்ட சாலைகள் உள்ளிட்ட புகார்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கையில், “சென்னை வடகிழக்கு பருவமழை பணியில், மேயர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை பணியாற்றி வருகிறார்கள். விரைவில் இதற்கான நடவடிக்கைகள் முன்னுரிமை அடிப்படையில் சீரமைக்கப்படும். மேலும் சாலைகள், சுரங்கப்பாதைகள் என தண்ணீர் தேங்குகிறதா என்று 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன” என கூறினர்.

இதையும் படிங்க: நவ.19 வரை மழை தான்.. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அப்டேட்!

Last Updated : Nov 16, 2023, 10:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.