ETV Bharat / state

உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் ஆர்.கே.சுரேஷின் ஒயிட் ரோஸ்! - White Rose by RK Suresh

நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'ஒயிட் ரோஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதன் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.

உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் ஆர்.கே.சுரேஷின் ஒயிட் ரோஸ்!

author img

By

Published : May 23, 2022, 6:30 PM IST

சென்னை: அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'ஒயிட் ரோஸ்'. இதில் ஆர்.கே. சுரேஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் தயாரிப்பாளர் ரூஸோ, மற்றொரு கதாநாயகனாக அறிமுகமாகிறார். நடிகை 'கயல்' ஆனந்தி ஆர்.கே. சுரேஷிற்கு ஜோடியாக நடிக்கிறார். என். எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, ஜோஹன் ஷிவனேஷ் இசையமைக்கிறார்.

கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுத, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். கலை இயக்குநர் டி. என். கபிலன் கவனிக்கிறார். சண்டைப் பயிற்சியை பிரபு அமைக்கிறார்.

'சைக்கோ திரில்லர்' ஜானரில் தயாராகும் இந்த 'ஒயிட் ரோஸ்' திரைப்படத்தை ஸ்டூடியோ 9 பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். கே. சுரேஷ், தயாரிப்பாளர் எஸ். ரூஸோவுடன் இணைந்து பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். இதன் தொடக்க விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, நடிகர் ஆரி உட்பட பல திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

படத்தைப் பற்றி இயக்குநர் ராஜசேகர் பேசுகையில்: 'அரசு மருத்துவமனைகளில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி, சைக்கோ திரில்லர் பாணியில் விறுவிறுப்பான திரைக்கதையாக ‘ஒயிட் ரோஸ்’ உருவாகியிருக்கிறது' எனக் கூறினார்.

'விசித்திரன்' திரைப்படத்தின் மூலம் சிறந்த நடிகர் என்ற அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றிருக்கும் தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ் நடிப்பில் தயாராகும் சைக்கோ திரில்லர் படம் என்பதால், 'ஒயிட் ரோஸ்' படத்திற்கு அறிவிப்பு நிலையிலேயே ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க:மலையாளத்தில் ஹீரோவாக களமிறங்கும் ஆர்.கே.சுரேஷ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.