ETV Bharat / state

மீண்டும் வனத்தில் ராஜநடை போடும் ரிவால்டோ... மறுவாழ்வு அளித்த தமிழ்நாடு வனத்துறை! - kudalur rivalto

கூடலூர் பகுதியில் மரக்கூண்டில் அடைத்து வைக்கப்பட்ட ரிவால்டோ யானையை, தமிழ்நாடு வனத்துறை நேற்று(ஆகஸ்ட் 3) வெற்றிகரமாக வனத்திற்குள் விடுவித்து மறுவாழ்வு அளித்துள்ளது .

ரிவால்டோ
rivalto
author img

By

Published : Aug 4, 2021, 4:48 AM IST

'ரிவால்டோ' என உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் இந்த யானை சுமார் 35 முதல் 40 வயதுடைய ஒரு காட்டுயானை ஆகும். காட்டுயானையாக இருப்பினும், பல ஆண்டுகளாக மசினகுடி பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலேயே சுற்றித் திரிந்துள்ளது. அவ்வப்போது, மக்களின் வசிப்பிடப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து உணவைப் பெற்றுக்கொண்டு வாழ்ந்து வந்தது.

ஆனால், ஊருக்குள் காட்டுயானை சுற்றித்திரிவது சில உள்ளூர்வாசிகளுக்கு அச்சத்தையும் நெருடலையும் ஏற்படுத்தியதால், வனத்துறையினர் கடந்த மே 5 ஆம் தேதி ரிவால்டோவை பிடித்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள தெப்பக்காட்டில் ஒரு மரக்கூண்டில்(Kraal) அடைத்து வைத்தனர்.

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு, தலைமையிலான குழு இந்நிலை குறித்து முழுமையாக ஆய்வு செய்தது. இக்குழுவில் தலைமை வன உயிரினக்காப்பாளர் சேகர் குமார் நீரஜ், உட்பட பல வனத்துறையினர் இடம் பெற்றிருந்தனர்.

யானை வனத்தில் விடுவது இதுவே முதன்முறை

தமிழ்நாடு அரசின் ஒப்புதலைப் பெற்ற பின்பு, இக்குழுவானது ரிவால்டோ யானையை வனத்திற்கு மீள அனுப்பி மறுவாழ்வளிக்க முடிவு செய்தது. தமிழ்நாட்டில் பிடிபட்ட காட்டு யானையினை மீண்டும் வனத்திற்குத் திரும்ப அனுப்பி மறுவாழ்வளிப்பது இதுவே முதன்முறையாகும்.

இக்குழு கடந்த 25 நாட்களாக இதற்கென மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு, கடந்த 48 மணி நேரத்தில் சிறப்பான முறையில் முன் ஏற்பாடுகளைச் செயல்படுத்தி முடித்து காட்டியுள்ளனர். இந்த யானையை வனப்பகுதியில் விடத் தேர்வு செய்துள்ள இடம் அதற்கு மிக உகந்ததும், நல்ல தீவன உணவுகள் கிடைக்கக் கூடியதுமான செழிப்பான வனப்பகுதி ஆகும்.

அடர்ந்த வனத்தில்

இப்பணியின் போது ரிவால்டோ யானைக்கோ அல்லது குழுவுக்கோ எவ்விதக் காயமுமின்றி, முதுமலை புலிகள் காப்பகத்தின் மைய வனப் பகுதிக்கு ரிவால்டோ கொண்டு செல்லப்பட்டது.

இதில் அரசின் முதன்மை செயலாளர், தலைமை வன உயிரினக் காப்பாளர் உள்ளிட்ட பல்வேறு தமிழ்நாடு வனத்துறை உயர் அலுவலர்களைக் கொண்ட குழுவும், 5 சிறப்பு கால்நடை மருத்துவர்களும், உலக வன உயிரின நிதியமும், அண்டை மாநில வன உயிரின நிபுணர்களும், உள்ளூர் மாவூத்துகளும் ஈடுபட்டனர்.

ஜெர்மனியிலிருந்து வந்த ரேடியோ கழுத்துப்பட்டை

மேலும், ரிவால்டோ யானையின் நடமாட்டங்களை நேரடியாக செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கும் வகையில், ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேடியோ கழுத்துப்பட்டை ஒன்று அதற்கு அணிவிக்கப்பட்டுள்ளது.

இக்கருவி யானையின் இருப்பிடம் குறித்த தகவல்களைத் துல்லியமாக வழங்குகிறது. ரிவால்டோ யானை உணவு சாப்பிட்டுக்கொண்டு முக்கியப்பகுதியில் ஜாலியாக உலாவி வருகிறது.

வனத்தினுள் நெடுந்தொலைவு வரை தனது புதிய வாழ்விடத்திற்குச் செல்ல உதவுவதும், ரேடியோ கழுத்துப்பட்டை மூலம் இருப்பிடத் தகவல்களைக் கண்காணிப்பதும், யானையின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உறுதி செய்யலாம்.

மனித-யானை மோதலை தடுக்கலாம்

அதே நேரத்தில், தெப்பக்காட்டில் உள்ள கண்காணிப்பு மையத்தின் வாயிலாக அதன் நடமாட்டங்கள் பதிவு செய்யப்படுவதால், மனித-யானை மோதல் உரிய நேரத்தில் தவிர்க்கப்படுகிறது.

மனித நடவடிக்கைகளால் அதிக அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் வன விலங்குகள் அதன் இயற்கைச் சூழலில் மீளப் பாதுகாப்பாக வாழ்வதற்கான ஒரு சிறப்பான முன்னுதாரணமாக இந்நடவடிக்கை அமையும். அதே சமயத்தில் மனித-வன உயிரின மோதலைத் தவிர்த்து, மனித உயிர்கள் பாதுகாக்கப்படுவதையும் இது உறுதி செய்துள்ளது.

இதையும் படிங்க: சுரங்கப்பாதை: தேசிய நெடுஞ்சாலைத்துறைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.