சென்னை, சேலம், மதுரை மற்றும் வேலூர் ஆகிய நான்கு மண்டலங்களில் செயல்பட்டு வந்த பழங்குடியினர் சாதி சான்றிதழ் மெய்த்தன்மை விசாரணை பிரிவுகளில் விசாரணையை துரிதப்படுத்தும் பொருட்டு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதுதொடர்பான அரசாணையை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை வெளியிட்டுள்ளது.
சென்னை மண்டலம்: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு (தலைமையிடம் : சென்னை).
சேலம் மண்டலம்: சேலம், நாமக்கல், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி (தலைமையிடம் : சேலம்).
மதுரை மண்டலம்: மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, இராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவாரூர், தென்காசி, திருச்சி, தஞ்சாவூர், கரூர், திண்டுக்கல், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை (தலைமையிடம் : மதுரை).
வேலூர் (புதிய) மண்டலம்: வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி (தலைமையிடம் : வேலூர்).
இதையும் படிங்க: மூட நம்பிக்கையை கலைவதற்கு பள்ளி பாடத்திட்டத்தில் பகுத்தறிவைக் கொண்டு வர வேண்டும் - கி.வீரமணி