ETV Bharat / state

அரசுக்கு அனைத்துவிதத்திலும் அறிக்கை உதவியாக இருக்கும் - ஏ.கே. ராஜன்

author img

By

Published : Jul 14, 2021, 3:22 PM IST

Updated : Jul 14, 2021, 6:38 PM IST

நீட் தேர்வினால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து அறிக்கையாகப் பல்வேறு தகவல்களுடன் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் மீது அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற நீதிபதி ஏகே ராஜன்
ஏ.கே. ராஜன்

சென்னை: நீட் தேர்வினால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து ஆய்வுசெய்து அறிக்கை அளிப்பதற்காக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்தக் குழுவினர் பல்வேறு தரவுகளைப் பெற்றும் பொதுமக்களிடமிருந்து கருத்துகளை வாங்கிய பின்னர், அறிக்கையை ஜூலை 8ஆம் தேதி இறுதிசெய்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட குழுவிற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்தது. இதனால் குழு தனது அறிக்கையைத் தயார் செய்திருந்தாலும் நீதிமன்றத் தீர்ப்பிற்குக் காத்திருந்தனர்.

ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன்

நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட குழுவிற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (ஜூலை 13) தள்ளுபடிசெய்தது.

இந்த நிலையில் நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அறிக்கையைக் குழுவில் தலைவர் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினார். இந்த அறிக்கை குறித்து ஈடிவி பாரத் ஊடகத்திற்கு, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் சிறப்புப் பேட்டியளித்தார்.

அதில், “தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வுசெய்து அறிக்கை அளிப்பதற்காக அரசு குழு அமைப்பது. எங்கள் பணிகளை ஜூன் 10ஆம் தேதி தொடங்கினோம். அரசு கூறியதுபோல் ஒரு மாதத்திற்குள் அறிக்கைத் தயார் செய்துவிட்டோம்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததால், அதில் தீர்ப்பின் அடிப்படையில் முதலமைச்சரிடம் 165 பக்கங்கள் கொண்ட அறிக்கை சமர்ப்பித்துள்ளோம்.

இந்த அறிக்கையில் நீட் தேர்வினால் பல்வேறு தரப்பிலும் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து புள்ளிவிவரங்கள் பெறப்பட்டு தயார்செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் பாதிப்புகள் குறித்து பல்வேறு தரப்பிலிருந்து பெற்ற கருத்துகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு கொள்கை முடிவு எடுக்கவும், நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக வழக்கினை எதிர்கொள்ளவும் தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளோம்.

நீட் தேர்வு வந்த பிறகு கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வுக்கு முன்னர் மருத்துவப் படிப்பில் அதிகளவில் சேர்ந்து வந்த நிலையில், நீட் தேர்வுக்குப் பின்னர் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் அதிக அளவில் சேர்ந்துள்ளனர்.

நீட் தேர்வினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அறிக்கையாகப் பல்வேறு தகவல்களுடன் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் மீது அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 45 வருடங்கள்... அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் மக்கள்!

Last Updated : Jul 14, 2021, 6:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.