ETV Bharat / state

கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை காய்கறிகள் விற்க தடை- வியாபாரிகள் எதிர்ப்பு

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில், நாளை (ஏப்.10) முதல் சில்லரை காய்கறிகள் விற்க தடை விதிக்கப்பட்டதற்கு, சில்லரை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். மேலும் முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கோயப்பேட் மார்கெட்
கோயம்பேட் மார்க்கெட்டில் சில்லரை காய்கறிகள் விற்க தடை விதிக்கப்பட்டதற்கு சில்லரை வியாபாரிகள் எதிர்ப்பு
author img

By

Published : Apr 9, 2021, 6:55 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. குறிப்பாக, நாளை (ஏப்.10) முதல் கோயம்பேட்டில் சில்லரை காய்கறிகள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோயப்பேட் மார்கெட்
கோயம்பேட் சந்தை

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில்லறை வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து கோயம்பேடு மார்க்கெட் ஏபிஜே அப்துல் கலாம் சங்கம் உறுப்பினர் செந்தில் பேசுகையில், “கோயம்பேடு மார்க்கெட் சுமார் 640 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் 40 ஏக்கரில் மட்டுமே காய்கறிகள் விற்க அரசு அலுவலர்கள் சொல்வது கண்டனத்துக்குரியது.

மொத்த வியாபாரிகள் மட்டும் அனுமதி அளிப்பதால் எங்களைப்போன்ற சில்லரை வியாபாரிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம். மேலும் 4000 சில்லரை கடைகள் உள்ளன.

இந்த 4000 கடைகளில் 5 நபர்கள் வீதம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும் கோயம்பேட்டிலிருந்து கரோனா தொற்றால் இதுவரை யாரும் இறக்கவில்லை. 200 பேர் வாழ்வாதாரத்தை மட்டுமே அரசு அலுவலர்கள் கருத்தில் கொண்டு உள்ளனர். எங்களைப் போன்ற ஏழை சில்லரை வியாபாரிகளை கண்டுகொள்ளவில்லை” என்றார்.

கோயம்பேடு மார்க்கெட் ஏபிஜே அப்துல் கலாம் சங்கத்தின் தலைவர் கண்ணன் பேசுகையில், “திரையரங்குகளில் 50 சதவீதம் அனுமதி, ஆனால் அத்தியாவசிய தேவையான சில்லரை காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மூடுவது வருத்தத்தை அளிக்கிறது. மேலும் 192 மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே ஆதரவு வழங்கப்படுகிறது. இரண்டாயிரம் சில்லரை காய்கறி கடைகளின் வியாபாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் சில்லரை வியாபாரிகளை நம்பியிருக்கும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும் கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த வியாபாரியிடம் இருந்துதான் தாங்கள் சில்லரையாக காய்கறி வாங்கி, அதனை விற்பனை செய்கிறோம். சில்லறை கடைகளையும் மூடுவதால் கோயம்பேடு மார்க்கெட்யில் மொத்த வியாபார கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாகும்.

இதன் காரணமாக கரோனா தொற்று அதிகமாகும் வாய்ப்பு உள்ளது. எங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்.

கோயப்பேட் மார்கெட்
சில்லரை வியாபாரைகள் போராட்டம்
கடந்த எட்டு மாதங்களாக சில்லரை வியாபாரிகள் கடைகள் போடாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். தங்கள் நகைகளை விற்று மீண்டும் தொழில் தொடங்கி வந்த சூழலில், இது போன்ற அறிவிப்பு தங்களை மீண்டும் முடியாத சூழ்நிலைக்கு தள்ளிவிடும்” என்றார்.

இதையும் படிங்க: கேரள மருத்துவக் குப்பைகள் பொள்ளாச்சியில் புதைக்கப்பட்ட சம்பவம் குறித்து கமல் ட்வீட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.