ETV Bharat / state

’மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படவில்லை’ - திமுக எம்பி குற்றச்சாட்டு

சென்னை: மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய இட ஒதுகீட்டிற்கான மாநில அரசால் அளிக்கப்பட வேண்டிய இடங்களை முறையாக ஒதுக்கவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் குற்றம்சாட்டியுள்ளார்.

Reservations for medical study have not been formally followed
Reservations for medical study have not been formally followed
author img

By

Published : Dec 28, 2019, 10:31 AM IST

இளநிலை மருத்துவப் படிப்பிற்கு 15 விழுக்காடு இடங்களும், முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு 50 விழுக்காடு இடங்களும் அகில இந்திய இடஒதுக்கீட்டிற்கென வழங்கப்பட்டு வருவதாகவும், அவ்வாறு இடஒதுக்கீடு வழங்கப்படாமல் மோசடி நடந்திருப்பதாகவும் வில்சன் கூறியுள்ளார்.

தொடர்ந்து இது தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வில்சன், ”இந்தப் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் ஏற்கனவே பேசியுள்ளேன். மத்திய சுகாதார அமைச்சருக்கும் கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு அவர் எழுதிய பதில் கடிதத்தில் ’இடஒதுக்கீடு மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் என்பதால் மாநிலத்திலேயே தனியாகச் சட்டம் இயற்றி இட ஒதுக்கீட்டை பின்பற்றலாம்’ எனத் தெரிவித்திருந்தார்.

அதன்படி தமிழ்நாடு அரசை பொறுத்தவரை 1994ஆம் ஆண்டு சட்டத்தின்படி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆனால், இந்தச் சட்டத்தின்படி மத்திய அரசுக்கு வழங்கப்படும் அகில இந்திய இட ஒதுக்கீடு பின்பற்றப்படாமல் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்கின்ற அடிப்படையிலேயே இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இது சமூகநீதிக்கு எதிரானது. எனவே இதனை உடனடியாக தடுக்க மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் முயற்சி எடுக்க வேண்டும். இதனால் இடம் கிடைக்காமல் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் வெகுவாக பாதிப்புக்குள்ளாகின்றனர்.

திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் பேட்டி

உதாரணமாக தமிழ்நாட்டில் 7,150 இடங்களில் அகில இந்திய இடஒதுக்கீடு 15 விழுக்காட்டின்படி 1,073 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். இதில் 50 விழுக்காடு இடங்கள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் எனில் 536 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் அவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த இடங்கள் ஒதுக்கப்படவில்லை.

இதேபோல் முதுநிலை மருத்துவப் படிப்பில் 537 இடங்கள், முதுநிலை பட்டயப்படிப்பில் 197 இடங்கள், பல் மருத்துவப் படிப்பில் 74 இடங்கள் ஆகிய இடங்கள் ஒதுக்கப்படாமல் இருந்துவருகின்றனர். இந்த நிலையில் அடுத்தாண்டு மருத்துவப் படிப்பிற்கான அறிவிப்புகளை தற்போது மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ளது. ஆனால் அதில் இந்த இடஒதுக்கீடு தொடர்பாக எங்கேயும் குறிப்பிடப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இட ஒதுக்கீடு தொடர்பாக கடிதம் எழுதிய திமுக எம்பி வில்சன்: பதிலளித்த மத்திய அமைச்சர்!

Intro:Body:மருத்துவ படிப்பிற்கான அகில இந்திய கோட்டாவில் முறையான இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகள் அந்தந்த மாநிலங்களுக்கு உள்ள மொத்த சீட்டுகளில் அகில இந்திய கோட்டாவிற்கு சீட்டுகள் வழங்க வேண்டும். அதன் படி இளநிலை படிப்பில் 15 சதவீத சீட்டுகளும் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு 50 சதவீத சீட்டுகளும் முதுநிலை மருத்துவ பட்டயப்படிப்பில் 50 சதவீத சீட்டுகளும் அகில இந்திய கோட்டா விற்கு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்படும் சீட்டுகள் முறையான இட ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படாமல் மோசடி நடப்பதாக திமுக எம்.பி வில்சன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி வில்சன் கூறுகையில், இந்த பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் பேசினேன், மத்திய சுகாதார அமைச்சருக்கும் கடிதம் எழுதினேன் அதன்படி அவர் எனக்கு எழுதிய பதில் கடிதத்தில் இடஒதுக்கீடு மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் என்பதால் மாநிலத்திலேயே தனியாக சட்டம் இயற்றி இட ஒதுக்கீட்டை பின்பற்றலாம் என தெரிவித்துள்ளார். மேலும் மாநிலத்தில் ஏற்கனவே உள்ள சட்டங்கள் இட ஒதுக்கீட்டை கட்டுப்படுத்துவதால் அந்த சட்டத்தை பின்பற்றியே இட ஒதுக்கீட்டையும் வழங்கலாம் என பதிலளித்துள்ளார்.

அதன்படி தமிழக அரசை பொறுத்தவரை 1994 ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என சட்டம் உள்ளது.
ஆனால் இந்த சட்டத்தின்படி மத்திய அரசுக்கு வழங்கப்படும் ஆல் இந்திய கோட்ட சீட்டுகளில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாமல் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்கிற அடிப்படையிலேயே சீட்டுகள் ஒதுக்கப்படுகிறது. இது சமூக நீதிக்கு எதிரானது எனவே இதை உடனடியாக தடுக்க தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனால் மருத்துவ சீட்டு கிடைக்காமல் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் வெகுவாக பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், உதாரணமாக தமிழகத்தில் மொத்தமுள்ள எம்.பி.பி.எஸ் சீட்டுகள் 7150 இதில் அகில இந்திய கோட்டவிற்கு வழங்கபடும் 15சதவீதத்தில்1073 சீட்டுகள், இந்த 1073சீட்டுகளில் தான் 50% பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் சீட்டுகள் 536. ஆனால் அவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த சீட்டுகள் ஒதுக்கப்படவில்லை.

இதேபோல் முதுநிலை மருத்துவ படிப்பில் 537சீட்டுகள், முதுநிலை பட்டயப்படிப்பில்197 சீட்டுகள் பல் மருத்துவ படிப்பில் 74 சீட்டுகள், ஒதுக்கப்படாமல் இருந்து வருகின்றனர். இந்தநிலையில் அடுத்த ஆண்டிற்கான மருத்துவ படிப்பிற்கான அறிவிப்புகள் தற்போது மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ளது ஆனால் அதில் இந்த இட ஒதுக்கீடு தொடர்பாக எங்கேயும் குறிப்பிடப்படவில்லை என தெரிவித்துள்ளார்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.