ETV Bharat / state

‘அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கப்படும்’ - அமைச்சர் உறுதி

’நீட் மசோதா குடியரசுத் தலைவர் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு உறுதியாக வழங்கப்படும்’ என அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதியாக தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 9, 2022, 10:09 PM IST

சென்னை கே.கே.நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்துகொண்டார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நீட் தேர்வு தேர்ச்சி சதவீதம் பெரிய அளவில் குறையவில்லை. கடந்த ஆண்டை விட 3 விழுக்காடு குறைந்துள்ளது. மேலும், மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் சரிவு ஏற்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில்தான் நீட் தேர்வு தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டது. நீட் தேர்வினால் ஏற்படும் ஒவ்வொரு மரணத்திற்கும் எடப்பாடி பழனிசாமிதான் பொறுப்பேற்க வேண்டும். நீட் தேர்வில் விலக்குப்பெற வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறது” எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “நீட் மசோதா குடியரசுத்தலைவர் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு உறுதியாக வழங்கப்படும்'' என சுப்பிரமணியன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர், ''செப்டம்பர் 30ஆம் தேதிக்கு பின் பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்திக் கொள்வதற்கான காலக்கெடு முடிவடைகிறது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் மா. சுப்பிரமணியன்

எனவே வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சேலம் மாவட்டம் ஆத்தூரில் 2 ஆயிரம் பேர் படிக்கும் பள்ளி, அதில் 900 மாணவர்கள் மாத்திரை உட்கொண்டதில் 3 பேருக்கு மயக்கம் வாந்தி ஏற்பட்டுள்ளது. இது குடற்புழு நீக்கமாத்திரையால் ஏற்பட்ட பாதிப்பில்லை. பயம் பதற்றத்தால் மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு” என்றார்.

இதையும் படிங்க: அரசு ஆவணங்களில் சேரி, குப்பம், காலனி பெயர்களை நீக்கக்கோரிய மனு - வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.