ETV Bharat / state

சென்னை மெரினாவில் கரை ஒதுங்கிய மிதவை.. நடந்தது என்ன? - cyclone mandous effect

மெரினா கடற்கரையில் கரை ஒதுங்கிய 6 அடி உயரம் கொண்ட தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சொந்தமான மிதவையை பாதுகாப்பாக மீட்டு ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைத்த போலீசாருக்கு ஆராய்ச்சியாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 11, 2022, 9:45 AM IST

மெரினாவில் கரை ஒதுங்கிய NCCR-ன் மிதவை! மீட்ட போலீசாருக்கு ஆராய்ச்சியாளர்கள் நன்றி..

சென்னை: மெரினா கடற்கரையில் கரை ஒதுங்கிய 6 அடி உயரம் கொண்ட தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்திற்குச் சொந்தமான மிதவையைப் பாதுகாப்பாக மீட்டு ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைத்த போலீசாருக்கு ஆராய்ச்சியாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

கடல் நீரின் தரத்தை ஆய்வு செய்ய உதவும், தேசிய கடலோர ஆய்வு மையத்தின் (National centre for coastal research) மிதவை, மாண்டஸ் புயல் (Mandous Cyclone) காரணமாக நேற்று (டிச.10) கடலில் காற்றில் அடித்து வரப்பட்டு மெரினா கடற்கரையில் மாநில கல்லூரிக்கு எதிரே கரை ஒதுங்கியுள்ளது. குறிப்பாக, இந்த மிதவையானது கடல் நீரில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் கடலுக்குள் உள்ள நிலப்பரப்பில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்தும் கடல் நீரின் தன்மைகள் குறித்தும் தேசிய கடல் சார் ஆய்வு மையத்தின் சார்பில் பயன்படுத்தக்கூடிய கருவியாகும்.

மாண்டஸ் புயல் எதிரொலியாக, கடல் அலைகள் அளவுக்கு அதிகமான சீற்றத்தின் காரணமாக, இந்த மிதவையானது சென்னை காமராஜ் சாலையில் அமைந்துள்ள மாநில கல்லூரிக்கு எதிரே கடல் நீரில் தரை தட்டி கரை ஒதுங்கியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த சென்னை சேப்பாக்கம் காவல் நிலைய உதவி ஆணையர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் மற்றும் கடலோர காவல் படை வீரர்கள் ஒன்றிணைந்து கடல் நீரில் அடித்து விடப்பட்டு மண்ணில் தட்டி கரை ஒதுங்கிய 6 அடி உயரம் கொண்ட மிதவையைக் கயிறு கட்டி இழுத்து கரைக்குக் கொண்டு வந்தனர்.

மேலும், போலீசார் தரப்பில் மீட்கப்பட்ட மிதவையைத் தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு ஆராய்ச்சியாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக, தேசிய கடல் ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர் செந்தில்குமார் என்பவர், நாட்டின் சொத்தை தமிழக காவல்துறையினர் இக்கட்டான நிலைமையிலும் மீட்டு தரவுகளுடன் ஒப்படைத்ததற்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: Mondous cyclone : 50 ஆயிரம் வாழை சரிந்து ரூ.1 கோடி இழப்பு... விவசாயிகள் கதறல்....

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.