சென்னையில் உள்ள 200 வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஏற்றார்போல் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் அனுமதி பெற்ற 12 அரசு பரிசோதனை மையங்களும், 18 தனியார் பரிசோதனை மையங்களும் உள்ளன.
இவற்றில் தான் பரிசோதனைகள் செய்ய முடியும். மேலும் கரோனா தொற்று தொடர்பான மாதிரிகள் சேகரிக்க அரசு மருத்துவமனைகள் தவிர பிற மருத்துவமனைகள் என சென்னை நகரில் குறிப்பிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்தாலும் இவர்கள் சம்மந்தப்பட்ட இடங்களுக்கு வந்து செல்வதற்கு போக்குவரத்து வசதிகள் இல்லாமல் இருப்பது பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர்.
மேலும், கரோனா தொற்று இல்லாத பலரும் பல்வேறு விதமான பாதிப்புகளுக்காக அரசு மருத்துமனைகளான ராஜீவ்காந்தி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை, கே.எம்.சி, ராயபுரம், ஸ்டான்லி உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு வந்து செல்ல போக்குவரத்து வசதிகள் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
ஆட்டோக்கள் இயக்க அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அதனை எல்லோரும் பயன்படுத்த முடியாத நிலைதான் உள்ளது என்பதால், அரசு மருத்துமனைக்கு வருபவர்களுக்காக போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து கொடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை சமூக ஆர்வலர்கள் முன் வைக்கின்றனர்.
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு பேருந்துகள் இயக்கக் கோரிக்கை..! - சென்னை அரசு மருத்துவமனை
சென்னை: கரோனா தொற்றுப் பரிசோதனை உள்ளிட்ட காரணங்களுக்காக மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் போக்குவரத்து வசதிகள் இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர்.