ETV Bharat / state

நிதிப் பகிர்வு - தமிழ்நாடு அரசுக்கு சமூக இயக்கங்களின் கோரிக்கை!

author img

By

Published : Jun 17, 2021, 7:35 PM IST

சென்னை: உள்ளாட்சிகளுக்கான நிதிப் பகிர்வு குறித்த விவரங்களை தனி இணைப்பாக தாக்கல் செய்ய வேண்டும் என சமூக இயக்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

மாநில நிதி நிலை அறிக்கை தாக்கல்
மாநில நிதி நிலை அறிக்கை தாக்கல்

தன்னாட்சி மக்களின் குரல், அறப்போர் இயக்கம், தோழன் இயக்கம் என பல சமூக இயக்கங்கள் ஒன்றிணைந்து, உள்ளாட்சிகளுக்கான அதிகாரப்பரவல் தேர்தல் அறிக்கை ஒன்றை தன்னாட்சி அமைப்பின் பொது செயலர் நந்தகுமார் சிவா தலைமையில் வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், ’’மாநில நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் போதே, உள்ளாட்சிகளுக்கான நிதிப் பகிர்வு குறித்த விவரங்களை அரசு தனி இணைப்பாக (Appendix) தாக்கல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்திருந்தோம்.

வரும் 21ஆம் தேதி கூடும் சட்டப்பேரவைத் கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கோரிக்கையைக் கருத்தில் கொண்டு, உள்ளாட்சிகளுக்குக்கான நிதிப் பகிர்வு விவரங்களை நிதிநிலை அறிக்கையில் இணைத்து தாக்கல் செய்ய வேண்டுகிறோம்.

தமிழ்நாட்டில் நிலவும் குழப்பம்

இந்த பெருந்தொற்று காலத்தில் கூட தங்களுக்கு நிதி விடுவிக்கப்படவில்லை என பல ஊராட்சித் தலைவர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த மாதம் நிதி விவரம் குறித்து, கிராம ஊராட்சித் தலைவர்களால் குறிப்பாகச் சொல்ல முடியாது.

கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம்

பல கிராம ஊராட்சித் தலைவர்கள், பெரும்பாலான சமயங்களில் மாநில, மாவட்ட வட்டார அளவிலான அலுவலர்கள் சொல்வதையெல்லாம் மறுபேச்சில்லாமல் ஏற்றுக் கொண்டு இயங்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர்.

வெளிப்படைத்தன்மை அவசியம்!

கடந்த 2017 ஆம் ஆண்டில் உட்கட்டமைப்புக்கான நிதி ஒதுக்கீடு என்ற பெயரில், மாநில அளவில் உள்ளாட்சிகளுக்கு வரவேண்டிய நிதியில் 20% நிதியை அரசு எடுத்துக் கொண்டது. மாநில அரசு, அரசாணை மூலம் இதுபோன்ற அதிகார துஷ்பிரயோகம் நடைபெறாமல் தவிர்க்க வெளிப்படைத்தன்மை அவசியமாகிறது.

மேலும், உள்ளாட்சிகளுக்கான நிதிப் பகிர்வு குறித்த வெளிப்படையான பட்டியல் இருக்கும் பட்சத்தில், ஊராட்சி பிரதிநிதிகளுக்கு மட்டுமல்லாமல், கிராமசபையின் உறுப்பினர்களான பொது மக்களுக்கும் திட்டமிடுவதற்கும், முடிவுகள் எடுப்பதற்கும் அவை பயனுள்ளதாக இருக்கும்.

கேரளா வழிகாட்டுகிறது

கேரள அரசு, அதன் மூன்றடுக்கு கிராம ஊராட்சிகள், நகர்ப்புற உள்ளாட்சிகள் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்படும் நிதிகளை தனித்தனியே பட்டியலிடுகின்றது. இந்த நடைமுறையைத் தொடர்ந்து பின்பற்றி வரும் கேரள அரசு, திட்ட நிதிகள், மாநில நிதிக்குழு நிதி, உள்ளாட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளுக்கான நிதி அரசியலமைப்பு ஆகியவற்றைத் தனித்தனியாகப் பிரித்து குறிப்பிடுவதால், நிதிப் பகிர்வு குறித்த எவ்வித குழப்பமும், எந்த மட்டத்திலும் ஏற்படுவதில்லை. இது, உள்ளாட்சிகள் தெளிவாக திட்டமிடவும், நிர்வாகம் மேற்கொள்ளவும் வழிவகுக்கிறது.

மேற்கு வங்கம், கர்நாடக மாநிலங்களிலும், நகர்ப்புற உள்ளாட்சிகள், கிராமப்புற உள்ளாட்சிகளுக்கான நிதிப்பகிர்வு விவரங்கள் பெரும்பாலும் தனி இணைப்புகளாக நிதிநிலை அறிக்கையுடன் கிடைக்கிறது.

சமூக நீதிக்கான கோரிக்கை

அரசியல் சாசனம், ஊராட்சிகளுக்கான நோக்கங்களாக சமூக நீதியையும் பொருளாதார முன்னேற்றத்தையும் குறிப்பிடுகிறது. பொருளாதார நிதிப் பகிர்வு குறித்த புரிதல் என்பது, வெறும் வரவுகளைப் பற்றி அறிந்து கொள்வது மட்டுமல்ல. மாறாக, சாமானிய மக்களுக்கான பணிகளை மேற்கொள்வதற்கான திட்டங்களை தீட்டுவதற்காகவும்தான். எனவே, தெளிவான நிதிப் பகிர்வு குறித்த தகவல் என்பது, சமூக நீதிக்கான பணி என்ற புரிதல் அரசுக்கு தேவை.

நம்பிக்கையோடு கோரிக்கை வைக்கிறோம்!

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இக்கோரிக்கையின் அவசியத்தை நிச்சயம் உணர்ந்து கொள்வார் என நம்புகிறோம். தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராம ஊராட்சி, ஒன்றிய ஊராட்சி மற்றும் மாவட்ட ஊராட்சிக்கான நிதிப்பகிர்வு, ஒவ்வொரு பேரூராட்சி, நகராட்சி , மாநகராட்சிக்கான நிதிப்பகிர்வு, ஆண்டுக்கு, எந்தெந்த வகையில் எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் நிதிநிலை அறிக்கையில் பிற்சேர்க்கையாக இணைத்துத் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கோருகிறோம்.

தமிழ்நாடு அரசு இந்தக் கோரிக்கையை ஏற்று, அதிகாரப் பரவலிலும், சமூக நிதியை நிலைநாட்டுவதிலும் தனக்குள்ள உறுதியை மெய்ப்பிக்கும் என நம்புகிறோம்" என அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பிரதமர் நரேந்திர மோடியுடன் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.