ETV Bharat / state

97 விழுக்காடு கோடீஸ்வரர்கள், 72 விழுக்காடு பட்டதாரிகள்: திமுக அமைச்சர்கள் குறித்த ஆய்வறிக்கை - தமிழ்நாடு செய்திகள்

சென்னை: திமுக அமைச்சர்களில் குறைவான சொத்து மதிப்பைக் கொண்டவர், பத்மநாபபுரம் தொகுதியைச் சேர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜ். அதிக அளவு கடன் பாக்கி வைத்திருப்பது ராணிப்பேட்டை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.காந்தி.`

திமுக அமைச்சர்கள்
திமுக அமைச்சர்கள்
author img

By

Published : May 13, 2021, 9:37 PM IST

திமுக எம்எல்ஏக்கள் 34 பேரில் 32 நபர்களின் குற்றப் பின்னணி, சொத்து மதிப்பு, கல்வி ஆகிய்வை குறித்து ஏடிஆர் (Association for Democratic Reforms) எனப்படும் ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி,

  • திமுக அமைச்சர்களில் 88 விழுக்காடு பேர், அதாவது 28 அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. 16 அமைச்சர்கள் தீவிரக் குற்ற வழக்கில் தொடர்புடையவர்களாக உள்ளனர்.
  • திமுக அமைச்சர்கள் 32 பேரில் 31 பேர் அதாவது 97 விழுக்காடு நபர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்பு 1.76 கோடி ரூபாயாக உள்ளது.
  • இவர்களில், குறைவான சொத்து மதிப்பைக் கொண்டவர், பத்மநாபபுரம் தொகுதியைச் சேர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜ். இவரது சொத்து மதிப்பு 23 லட்சத்து 39 ஆயிரம் ரூபாயாக உள்ளது.
    திமுக அமைச்சர்கள்
    திமுக அமைச்சர்கள்
  • அமைச்சர்களில் அதிகபட்சமாக கடன் பாக்கி வைத்திருப்பது ராணிப்பேட்டை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.காந்தி. இவர், 14.46 கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்துள்ளார்.
  • திமுக அமைச்சர்களில் 28 விழுக்காடு நபர்கள், அதாவது ஒன்பது அமைச்சர்கள் 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்தவர்களாகவும், 23 அமைச்சர்கள் பட்டதாரிகள் அல்லது அதற்கு மேல் படித்தவர்களாக உள்ளனர்.
  • அமைச்சரவையில் இரண்டு பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.
  • பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தான் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தேசியக் கல்லூரியில் அரசியலில் பட்டம் பெற்றுள்ளதாக தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
    ஆளூநருடன் ஸ்டாலின்
    ஆளூநர் பன்வாரிலால் புரோஹித்துடன் முதலமைச்சர் ஸ்டாலின்
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: அனைத்துக் கட்சி கூட்டத்தில் என்ன பேசினார் ஸ்டாலின்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.