ETV Bharat / state

'தமிழ்நாட்டிற்கு இலவச அரிசி, கோதுமைக்காக மத்திய அரசு ரூ.3,300 கோடி ஒதுக்கீடு' - இந்திய உணவுக்கழகம் - Chennai district News

சென்னை: ஊரடங்கு காலத்தில் இலவச அரிசி, கோதுமைக்காக மத்திய அரசு சுமார் ரூ. 3,300 கோடி தமிழ்நாட்டிற்கு ஒதுக்கியுள்ளதாக இந்திய உணவுக்கழகம் தெரிவித்துள்ளது.

 Report by Food corporation India Executive Director R.D. Naseem

author img

By

Published : Jul 11, 2020, 9:11 AM IST

இந்திய உணவுக்கழகம் கூடுதல் இலவச அரிசி வழங்கத் தொடங்கியது என்று அதன் செயல் இயக்குநர் R.D.நஸீம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 'பிரதம மந்திரியின் ஏழைகள் நலன்காக்கும் உணவு வழங்கும் திட்டத்தின் (PMGKAY) 2ஆவது கட்டமாக, இலவச கூடுதல் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC), இந்திய உணவுக்கழக கிடங்குகளில் இருந்து எடுக்கத் தொடங்கியுள்ளது. முதல்நாளான நேற்று(ஜூலை 10) 2006 டன் அரிசி விநியோகத்திற்காக எடுத்துள்ளது.

இவை பயனாளிகளுக்கு இன்றிலிருந்து ரேசன் கடைகள் மூலமாக வழங்கப்படும். நாடுதழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் குறிப்பாக, ஏழைகளுக்கு உணவுதானியம் கிடைக்கும் வண்ணம், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் முதற்படியாக இந்த ஆண்டின் ஏப்ரலிலிருந்து ஜூன் மாதம் வரை, தேசிய உணவுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ரேசன் மூலமாக உணவு தானியங்களைப் பெற்றுக் கொண்டிருந்த 80 கோடி மக்களுக்கு, மேலும் கூடுதலாக மாதத்திற்கு 5 கிலோ அரிசி வீதம் மூன்று மாதங்கள் இலவசமாகப்பெறும் வகையில், மத்திய அரசு "பிரதம மந்திரியின் ஏழைகள் நலன்காக்கும் உணவு வழங்கும் திட்டத்தினை"(PMGKAY) அறிமுகப்படுத்தியது.

இத்திட்டத்தின் கீழ், இதுவரை 120 லட்சம் மெட்ரிக் டன் உணவுதானியங்கள், ரேசன் கடைகள் மூலமாக பாதிப்புக்குள்ளான மக்களுக்கு வழங்கப்பட்டது. இத்திட்டம் இப்பொழுது மேலும் 5 மாதங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் 201 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவுதானியங்கள் நாடு முழுவதும் கூடுதலாக விநியோகிக்கப்படும்' என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், ' இந்திய உணவுக் கழகம் (FCI - Food Corporation India) வழக்கமாக மாதம் 2.93 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை ரேசன் கடைமூலமாக விநியோகத்திற்காக வழங்கி வருகிறது. கரோனா காலத்தில் பிரதம மந்திரியின் ஏழைகள் நலன்காக்கும் உணவு வழங்கும் திட்டத்தின் (PMGKAY) கீழ், தமிழ்நாட்டிற்கு மட்டும் ஒவ்வொரு மாதமும் கூடுதலாக 1.78 லட்சம் மெட்ரிக் டன் வீதம் மூன்று மாதத்திற்கும் மொத்தமாக ரூ. 2001 கோடி மதிப்புள்ள 5.34 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை பொது விநியோகத்திற்காக வழங்கியுள்ளது.

ஊரடங்கு இருந்தபோதும் மிகக்குறைவான கால அவகாசத்தில் இந்திய உணவுக் கழகத்திடமிருந்து ஒதுக்கப்பட்டுள்ள அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் பெற்றுக்கொண்டு ரேசன் கடைகள் மூலமாக விநியோகமும் செய்து முடித்துவிட்டது. இதனால் பயனாளிகள் அனைவருக்கும் வழக்கமாக கிடைக்கும் அரிசியைக் காட்டிலும் ஒவ்வொரு மாதமும் 5 கிலோ கூடுதலாக விநியோகிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமல்படுத்திய நாளிலிருந்து இதுவரை, இந்திய உணவுக் கழகம் சுமார் 12.72 லட்சம் டன் உணவு தானியங்கள் 489 ரயில்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது என்று அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பொழுது PMGKAY திட்டம் மேலும் 5 மாதங்கள் விரிவுபடுத்தப்பட்டு தமிழ்நாட்டிற்கு 8.93 லட்சம் மெட்ரிக் டன் உணவுதானியங்கள் அதாவது ஒரு கோடியே 78 லட்சம் மூட்டை (50 கிலோ வீதம்) பொது விநியோகத்திற்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

இதில் 85,4035 டன் அரிசி; 39,307 டன் கோதுமை அடங்கும். இதற்காக மத்திய அரசு சுமார் ரூ. 3,300 கோடி தமிழ்நாட்டிற்கு ஒதுக்கியுள்ளது. இத்திட்டங்களுக்குத் தேவையான அரிசியை ஆந்திரா, தெலங்கானா, பஞ்சாப் மற்றும் ஒடிசா மாநிலங்களிலிருந்தும் கோதுமையை மத்தியப்பிரதேசத்திலிருந்தும் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றது.

தமிழ்நாட்டில் அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் உள்ள 68 இந்திய உணவுக் கழக கிடங்குகளில் 13 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் தயாராக கையிருப்புள்ளது' என்று கூறினார்.

இவை மட்டுமல்லாது நாடு முழுவதுமுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு, "ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் 2 மாதங்களுக்கு இலவசமாக அரிசி ஒதுக்கீடு செய்தது.

இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு மட்டும் மே,ஜூன் மாதங்களுக்காக ஒதுக்கப்பட்ட 35,734 மெட்ரிக் டன் அரிசியை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மட்டுமில்லாமல் ரேசன் கார்டு இல்லாத ஏழை மக்களுக்கும் மாதம் 5 கிலோ வீதம், இரண்டு மாதங்களுக்கு வழங்குவதற்காக இந்திய உணவுக் கழக கிடங்குகளிலிருந்து ஏற்கனவே தமிழ்நாடு அரசு எடுத்து விட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.