ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழைய விமானங்களை அகற்றும் பணி தொடக்கம் - Chennai International airport

சென்னை விமான நிலையத்தில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழைய விமானங்களை அகற்றும் பணி தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழைய விமானங்களை அகற்றும் பணி தொடக்கம்

author img

By

Published : Sep 15, 2022, 7:32 AM IST

சென்னை விமான நிலையத்திலிருந்து ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு என்.இ.பி.சி., கிங்பிஷர், ஜெட் ஏா்வேய்ஸ், டெக்கான் ஏா்லைன்ஸ் மற்றும் பேராமவுண்ட் ஆகிய விமான நிறுவனங்களைச் சோ்ந்த விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது இந்த விமான நிறுவனங்கள் செயல்பாட்டில் இல்லை.

இதில் டெக்கான் ஏா்லைன்ஸ் மற்றும் பேராமவுண்ட் ஆகிய விமான நிறுவனங்களின் விமானங்கள் ஏதும் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படவில்லை. ஆனால் என்.இ.பி.சி, கிங்பிஷா் மற்றும் ஜெட் ஏா்வேய்ஸ் ஆகிய விமான நிறுவனங்களின் பயன்படுத்தப்படாத 12 விமானங்கள், சென்னை விமான நிலையத்தில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் நான்கு என்.இ.பி.சி. விமானங்கள், ஒரு ஜெட் ஏர்வேஸ் விமானம் ஆகிய ஐந்து விமானங்கள் கடந்த 2021 ஆம் ஆண்டில் முறைப்படி தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை அலுவலர்களின் ஒத்துழைப்போடு அப்புறப்படுத்தப்படும் பணிகள் நடைபெற்றன.

முக்கியமாக விமானங்களை உடைத்து அப்புறப்படுத்தும்போது அதனால் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுத்தப்படாத நிலையில் பணிகள் நடைபெற்றன. இந்நிலையில் கிங்பிஷர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான 7 விமானங்களில் 2 விமானங்களை அப்புறப்படுத்தும் பணி சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.

அப்போது பயன்படுத்தும் நிலையில் இருக்கும் எஞ்சின் உட்பட தொழில் நுட்ப கருவிகள் மற்றும் முக்கியமான பாகங்கள் தனியே பிரித்து வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பிரித்தெடுக்கப்பட்ட விமான பாகங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.

இந்நிலையில் தற்போது மீதமுள்ள பழைய விமானங்களையும் அப்புறப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப்பணிகளை அந்தந்த விமான நிறுவனங்கள் முன்னெடுத்து வருகின்றன.

இதுகுறித்து சென்னை விமான நிலைய அலுவலர் ஒருவர் கூறுகையில், “சென்னை விமான நிலையத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட உள்ள விமானங்களை முதற்கட்டமாக அந்த விமானங்களின் மதிப்புகளை மதிப்பீடு செய்யும் பணிகள் தொடங்கப்படுகின்றன.

சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழைய விமானங்கள்

அதன் அடிப்படையில் அவற்றை அப்புறப்படுத்தும் பணி தொடங்கும். விமானங்களின் எஞ்சின் மற்றும் முக்கிய உதரி பாகங்கள் ஆகியவை தனியாக எடுத்து பாதுகாப்பாக வைக்கப்படும்.

இந்த பழைய விமானங்களை அப்புறப்படுத்துவதன் மூலமாக 2012 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையிலான விமான நிறுத்தக் கட்டணம் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்படும். இதனால் சென்னை விமான நிலையத்திற்கு கூடுதல் வருவாய் மொத்தமாக கிடைக்கும்.

இவை தவிர சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் நிறுத்தி வைக்கப்படும் இடங்களை இந்த பழைய விமானங்கள் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து இருந்தன. இப்போது அந்த விமானங்கள் அகற்றப்படுவதால் மற்ற விமானங்களை நிறுத்துவதற்கு கூடுதல் இட வசதி கிடைக்கும்.

மேலும் முக்கியமாக இந்த பழைய விமானங்கள் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக தொடா்ந்து நிறுத்தப்பட்டிருந்ததால், தற்போது அகற்றப்படுவதன் வாயிலாக பல்வேறு வகையான பறவைகள் அந்த விமானங்களுக்குள் கூடு கட்டி வசித்து வந்தன.

இதனால் விமானங்கள் புறப்படும்போதும், தரையிறங்கும்போதும் பறவைகளால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் இனி விமானங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறையும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் இந்தியில் மட்டும் அறிவிப்பு ? அதிகாரிகள் விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.