ETV Bharat / state

ஆட்சி மாற்றம் வாக்கு விகிதத்தில் இல்லை, அது வாக்காளர்களின் அரசியல் தேர்வில் இருக்கிறது. - தேர்தல் திருவிழா

ஏப்ரல் 6ஆம் தேதி நடந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் நிகழ்ந்திருக்கும் அதிகமான வாக்குப்பதிவு தேர்தல் ஆய்வாளர்களின் மத்தியிலும், அரசியல் நோக்கர்கள் மத்தியிலும் ஏராளமான ஊகங்களைக் கிளப்பி விட்டிருக்கிறது. 2019-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 72.41 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 72.81 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளன. எப்போதுமே அதிக விழுக்காட்டில் வாக்குப்பதிவு நிகழும்போது அதற்கான காரணமாகச் சொல்லப்படுவது ஆட்சிமாற்றம். ஆனால் நிஜத்தில் சில சமயங்களைத் தவிர பெரும்பாலான சமயங்களில் கிடைக்கும் தரவுகள் அதற்கு சாட்சியாக இருப்பதில்லை. இந்தத் திராவிட பூமியில் குறைவான வாக்குப்பதிவு நிகழ்ந்த நேரங்களில் கூட ஆட்சிமாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இந்த ஜனநாயகத் திருவிழா வெளிப்படுத்தும், ஆனால் கண்டுகொள்ளப்படாத உண்மை என்பது இதுதான்: பல்முனைப் போட்டியில் அரசியல் கட்சிகள் என்னதான் இலவசங்களை அள்ளி இறைத்துக் கொட்டினாலும், வாக்காளர்கள் தங்களுக்கான அரசியல் தேர்வைச் சரியாகவே செய்கிறார்கள்.

ஆட்சி மாற்றம்
ஆட்சி மாற்றம்
author img

By

Published : Apr 10, 2021, 6:46 AM IST

சென்னை: தமிழ்நாடு வாக்களித்து முடித்துவிட்டது; அதற்கான முடிவுகளுக்கு சற்று நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. மக்கள் தங்கள் வழக்கமான பணிகளுக்குத் திரும்பி விட்டார்கள். அரசியல் கட்சிகள் தங்கள் ஆர்வலர்களை, அதிமுக்கிய நாளான மே 2ஆம் தேதி வரை மின்னணு வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கண்காணிப்பு பணிசெய்ய அனுப்பி இருக்கின்றன.

ஏப்ரல் 6-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கிட்டத்தட்ட 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விழுக்காட்டைப் போலவே இருப்பதால், திராவிட முன்னேற்றக் கழகம் தனக்கு ஒரு பேரலை வெற்றி சித்திக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறது. அதேபோல அதிமுக-பாஜக கூட்டணியும் அந்த அலை தங்களை நோக்கியே திரும்பி வரும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறது. நிஜத்தில் அதிகமான வாக்குப்பதிவு என்பது எதை ஆருடமாகச் சொல்கிறது? இது ஓர் அமைதியான சுனாமியா?

தங்கு தடை இல்லாத பரப்புரை ஆர்ப்பாட்டமெல்லாம் இப்போது ஓய்ந்து விட்டபடியால், பெண்டுலம் எந்த பக்கம் ஆடுகிறது என்பது தெளிவாகலாம். திமுகவைப் பொறுத்தவரையில், கூட்டணிக் கணக்கும், ஆள்வோருக்கு எதிராக இரட்டிப்பான மக்கள் மனநிலையும் அதன் பலம். எரிபொருள் விலை உயர்வுடன், மோடிக்கு எதிரான சொல்லாடலைப் பலமாகக் கட்டமைத்து வைத்தது திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்குச் சாதகமாகவே இருக்கின்றன.

அதிமுகவைப் பொறுத்த மட்டில், பாஜகவுடன் கொண்ட கூட்டணி உறவு அதற்குப் பெருஞ்சுமையாகவே வந்து தொலைத்தது. தேசிய ஜனநாயக கூட்டணியைச் சுமக்கும் பாரம் முதலமைச்சர் ‘எடப்பாடி’ கே பழனிசாமியின் தோள்களில் வந்து விழுந்தது. முதலமைச்சர் அரியணையில் பெரிதாக ஓர் எதிர்மறைப் பிம்பம் இல்லாமலே அவர் முழு ஆட்சிக் காலத்தையும் ஓட்டிவிட்டார் என்பது அவர்க்கு பேருதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

மக்கள் தீர்ப்பு தங்களுக்குத்தான் சாதகமாக வரும் என்று இரண்டு திராவிடக் கட்சிப் பாசறைகளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. அதே நேரம், ‘கெளரவமான தோல்வி’ வந்தால் கூட அது முதலமைச்சர் பழனிசாமிக்கு வெற்றிதான் என்று ஆளும்கட்சி வட்டாரங்கள் ஒத்துக் கொள்கின்றன. திமுகவுக்கு வெற்றி என்பது அவ்வளவு எளிதாக வாழைப்பழத்தை உரித்து கொடுப்பது போல் அமைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து தாங்கள் கடுமையான போட்டியை உண்டாக்கி விட்டதாக அதிமுகவினர் எண்ணுகிறார்கள்.

சில ஆய்வாளர்கள் அதிமுகவுக்குச் சார்பாக 2016-ல் நடந்த சட்டசபைத் தேர்தலைச் சுட்டிக்காட்டுகின்றனர். அந்தத் தேர்தலில் 74.24 விழுக்காடு வாக்குப் பதிவானது. அதன் விளைவாக ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. இவ்விதமான சாதனையைச் செய்தவர் கட்சி நிறுவனரான எம்.ஜி.ராமச்சந்திரன் மட்டுமே. இந்தக் கருத்தை மறுதலித்து மூத்த பத்திரிகையாளர் தயாளன் ஷண்முகா, 1996ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 66.95 விழுக்காடு மட்டுமே வாக்குகள் பதிவாகின என்பதைச் சுட்டிக் காட்டினார். அப்போது ஜெயலலிதா அரசுக்கு எதிரான மாபெரும் அலை ஒன்று தமிழ்நாடு முழுவதும் நிரம்பி வழிந்தது என்றும் அவர் கூறினார்.

“2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை அளவுகோலாக வைத்துக் கொண்டு தான் 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை ஆராய வேண்டும். இந்தத் தேர்தல் 2019-ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் நீட்சியாகப் பார்க்கப்பட வேண்டும். 2019—ஆம் ஆண்டில் மோடிக்கு எதிரான பொதுப்புத்தி சொல்லாடல் உச்சத்தை எட்டியதால், திமுக 39 மக்களவைத் தொகுதிகளில் 38 தொகுதிகளை அள்ளிச் சென்றது. அந்த வெற்றி நீர்த்துப் போய்விடவில்லை; சொல்லப் போனால் அது இப்போது மேலும் உரமேறி இருக்கிறது, என்னதான் பிரதமர் நரேந்திர மோடி உட்பட ஏராளமான பாஜக பெரும்புள்ளிகள் மாநிலம் முழுக்கச் சுற்றி பரப்புரை மேற்கொண்டனர் என்றாலும். சென்னையிலும், பிற மாவட்டங்களிலும் மக்கள் வாக்களித்த பாணி 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் கடைப்பிடித்த வாக்குப் பாணியை போலவே இருக்கிறது. இது ஓர் அமைதியான சுனாமி; வேறொன்றுமில்லை,” என்று தயாளன் பகுப்பாய்வு செய்கிறார்.

கடந்த 2001ஆம் ஆண்டுத் தேர்தலில் பதிவான வாக்கு விழுக்காடு வெறும் 59.07 மட்டும்தான். 1957ஆம் ஆண்டிலிருந்து கணக்குப் போட்டால் இப்படி குறைவாக வாக்குப்பதிவு நிகழ்ந்திருப்பது இது இரண்டாவது தடவை. ஆனால் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. கருணாநிதி அரசு வீழ்ந்தது; ஜெயலலிதா அரியணைக்குத் மீண்டும் திரும்பினார்,

ஒவ்வொரு தேர்தலுக்கும் அதற்கே உரிய விசேச இயங்குமுறை உண்டு. இந்தத் தேர்தல் சிறப்பான ஒன்று என்கிறார் தேர்தல் ஆய்வாளர் பி. ராமஜெயம். “ஐந்து முதலமைச்சர் வேட்பாளர்கள் களம் இறங்கிய தேர்தல் இது. அது மட்டுமல்லாமல், முழுத் தேர்தல் செயல்முறையும் நிறுவனமயமாகி இருக்கிறது. கதாநாயக வழிபாடு கொண்டுவரப் பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட கூட்டணிகளின் பலத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும், சீமானின் அதீத தமிழ் தேசியவாத நாம் தமிழர் கட்சியும் அதிமுக, திமுக என்னும் திராவிடக் கட்சிகளின் வாங்கு வங்கியில் நுழைந்து வேட்டையாடுவதைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், வெற்றி வாக்கு வித்தியாசம் குறைந்து விடலாம். ஆனாலும் பெண்டுலம் திமுகவை நோக்கியே அசைவது போலத் தெரிகிறது. இது ஓர் அரசியல் தேர்வு,” என்று விளக்குகிறார் ராமஜெயம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.