ETV Bharat / state

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார் - ஓபிஎஸ் வாதம்

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்காக, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக விதிகள் திருத்தப்பட்டுள்ளதாகவும், நிபந்தனைகளை நீக்கினால், பொதுச்செயலாளர் தேர்தலில் தாம் போட்டியிடத் தயார் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

ஓபன்னீர்செல்வம் தரப்பு வாதம்
ஓபன்னீர்செல்வம் தரப்பு வாதம்
author img

By

Published : Mar 22, 2023, 3:09 PM IST

சென்னை: அதிமுக பொதுச்செயலளார் தேர்தல் மார்ச் 26-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர், வைத்திலிங்கம் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரித்த உயர்நீதிமன்றம், அனைத்து வழக்குகளையும் திங்கள்கிழமை விசாரிப்பதாக தெரிவித்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (மார்ச் 22) விசாரணைக்கு வந்தது.

அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் "கட்சியில் இருந்து பன்னீர்செல்வத்தை நீக்கியது தன்னிச்சையானது, நியாயமற்றது. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பன்னீர்செல்வம் முதலமைச்சராக, நிதி அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். 1977-ம் ஆண்டு முதல் கட்சியில் இருக்கிறார். கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்ட நேரங்களில் ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்காக முக்கியப் பங்காற்றியுள்ளார்.

ஒருங்கிணைப்பாளர் பதவி 2026 வரை நீடிக்கிறது. எந்த வாய்ப்பும் அளிக்காமல் எந்தக் காரணமும் கூறாமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர், இது தன்னிச்சையானது, நியாயமற்றது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைக்கும் முடிவு தன்னிச்சையானது.

கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியும். அந்த விதியை பொதுக்குழு உறுப்பினர்கள் திருத்த முடியாது. விதிகளை மீறி யாரும் போட்டியிடாதவாறு இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வந்துள்ளனர். ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகிவிட்டதாக எந்த நீதிமன்றமும் அறிவிக்கவில்லை. தகுதி நீக்கம் செய்துவிட்டு பதவிகள் காலாவதியாகிவிட்டதாகக் கூறுவதை எப்படி சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?. ஜூலை 11-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது.

பெரும்பான்மை உள்ளதால் எந்த முடிவும் எடுக்க முடியும் எனக் கூறி முடிவெடுத்துள்ளனர். இந்த முடிவுகள் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் நோக்கத்துக்கு விரோதமானது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. 1977 முதல் கட்சியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராகவும், நிதி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்ட நேரங்களில் ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்காக முக்கிய பங்காற்றியுள்ளார். ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுவில் எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாமல், சிறப்புத் தீர்மானம் கொண்டு வந்து ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கினர். இந்த சிறப்பு தீர்மானத்தின் மீது எந்த விவாதமும் நடத்தப்படவில்லை.

எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் ஆக்குவதற்காகவே என்னை கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர். திமுகவுடன் நெருக்கம் காட்டியதாக எளிமையான காரணம் கூறி நீக்கியுள்ளனர். ஜனநாயகத்தின் முக்கிய கட்டமைப்பு அரசியல் கட்சி.

உட்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது எனக் கூறுவதற்கு, அரசியல் கட்சிகள் சங்கங்களோ, கிளப்களோ அல்ல. கட்சியில் எந்த விதிகள் திருத்தப்பட்டாலும் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டு, அங்கீகாரம் பெற வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக கூறும் எதிர் தரப்பினர், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களை மட்டும் ஏற்றுக் கொண்டுள்ளனர். பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக நினைத்த அனைத்தையும் செய்து விட முடியாது. பொதுக்குழு தீர்மானங்களுக்குத் தடை விதிக்க வேண்டும்.

பொதுச்செயலாளர் பதவிக்காக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக விதிகள் திருத்தப்பட்டுள்ளன. அடிப்படை உறுப்பினர்கள் போட்டியிட முடியாத வகையில் நிபந்தனைகளை விதித்து விதிகளை திருத்தியுள்ளனர். நிபந்தனைகளை நீக்கினால் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார். பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவதற்கு முன் கட்சியினரிடம் கருத்து கேட்கப்படவில்லை. கட்சியின் உறுப்பினர்கள் பட்டியலை வெளியிட்டு பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும். நிபந்தனைகளை நீக்கினால் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கை வாபஸ் பெற தயார்" என வாதாடப்பட்டது.

இதையும் படிங்க: "திமுக என்றாலே வன்முறை கட்சி தான்" - ஹெச். ராஜா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.