சென்னை: மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை கண்டு ரசிக்க ஏதுவாக, 1 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிரந்தர நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. நம்ம சென்னை செல்ஃபி பாய்ண்டின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள இந்த நடைபாதை 263 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், ஒரு மீட்டர் உயரமும் கொண்டுள்ளது.
நடைபாதையின் இருபுறமும் மரத்தாலான கைப்பிடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சக்கர நாற்காலிகள் பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் இந்த நடைபாதையை எந்தவித சிரமமும் இன்றி பயன்படுத்தலாம்.
"சிங்கார சென்னை 2.0" திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த நடைபாதையை இன்று சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: உதயநிதி அமைச்சராக வர அனைத்து தகுதியும் கொண்டவர் - மா.சுப்பிரமணியன்