தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் இம்மாதம் 29ஆம் தேதி முடிவடையும் நிலையில் அந்த காலி இடங்களை நிரப்புவதற்காக, இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தல் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.
மே 24ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும் வேட்மனுவை தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் மே 31ஆம் தேதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் என்றும் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ள ஜூன் 3ஆம் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜுன் மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடைபெற்று அன்றே வாக்குகள் எண்ணப்படும் என தேர்தல் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாடு சட்டபேரவைச் செயலகத்தின் செயலாளரை தேர்தல் நடத்தும் அலுவலராகவும், தமிழ்நாடு சட்டபேரவைச் செயலகத்தின் துணைச் செயலாளரை உதவி தேர்தல் நடத்தும் அலுவலராகவும் நியமனம் செய்துள்ளது.
இதையும் படிங்க: அரசியலில் யார் தான் புனிதர்... கே.என்.நேரு பேச்சு !