சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு கராத்தே தியாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ரஜினி அறிக்கை என்று சமூக வலைதளப் பக்கத்தில் பரவிய அறிக்கைக்கு ரஜினி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
அவரது உடல்நிலை குறித்து தெளிவாகச் சொல்லிவிட்டார். விரைவில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தி பொதுமக்களுக்கு அரசியல் நிலைப்பாடு குறித்த முடிவை அறிவிப்பார். கரோனா வைரஸ் பரவலால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் தேசிய தலைவர்களும் வெளியே வராமல் இருந்தனர்.
அதுபோல், ரஜினிகாந்தும் வெளியே வராமல் இருந்துவருகிறார். விரைவில் அவரது நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவாக கூறுவார்" என்றார்.