கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துவரும் மாணவன் அத்வைத் மனாஷி. ரூபிக்ஸ் கியூப் விளையாடுவதில் மிகவும் ஆர்வமுள்ள இவர், அதை வைத்து பிரபலங்களின் புகைப்படங்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்தவகையில், நடிகர் ரஜினிகாந்த்தின் முகத்தை 300 கியூப்களை வைத்து வடிவமைத்து அத்வைத் அசத்தியுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “உங்களது உருவப்படத்தை நான் வரைந்துள்ளேன். நீங்கள் இதனை விரும்புவீர்கள் என நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
அதற்குப் பதில் அளிக்கும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் ஆடியோ மூலம் அந்த சிறுவனுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.