சென்னை: ரஜினி பிறந்தநாளையொட்டி அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காகச் சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டு முன்பு அதிகாலையிலேயே ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். பூங்கொத்து, கேக் மற்றும் ரஜினி உருவ சுவரொட்டியுடன் அவர்கள் காத்து நின்றனர். ரஜினி வீட்டில் இல்லை என அவரது தரப்பிலிருந்து கூறப்படப்பட்டாலும் ரஜினியைப் பார்த்துவிட்டுத் தான் சொல்வோம் என ஆவலுடன் ரசிகர்கள் காத்திருந்தனர்.
அப்போது அவரது ரசிகர்கள் சிலர் ’எங்கள் குல சாமியே என்றும், நாங்கள் வழிபடும் சிவனே, நாங்கள் கூப்பிடுவது உங்களுக்குக் கேட்கவில்லையா? என ரசிகர்கள் கோஷமிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனிடையே, ரஜினிகாந்த் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த்தின் பிறந்த நாளையொட்டி, அவர் நடித்து வரும் 170 ஆவது படத்தின் தலைப்பு இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும் என லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதேபோல பிறந்தநாள் டீசர் வீடியோவும் வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
மேலும், சமூக வலைத்தளங்களில், தலைவர் 170, ஹாப்பி பர்த்டே ரஜினிகாந்த், உள்ளிட்ட ஹேஷ்டேக் டிரெண்டிங்காக இருந்து வருகிறது. ரஜினிகாந்த்தின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள்,கோயில்களில் சிறப்புப் பூஜை செய்வது, அன்னதானம் வழங்குவது, நலத்திட்ட உதவிகள் செய்து, ரஜினியின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி வருகின்றன.
இதையும் படிங்க: தலைமைச் செயலாளர் உடன் மத்திய குழு ஆலோசனை.. 2 நாட்கள் இரண்டு பிரிவாக மிக்ஜாம் புயல் பாதிப்புகள் ஆய்வு!