ETV Bharat / state

சுஜித்தின் மரணம் வேதனையளிக்கிறது - ரஜினிகாந்த்

author img

By

Published : Oct 29, 2019, 5:14 PM IST

சென்னை: ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சுஜித்தின் மரணம் வேதனையளிப்பதாக ரஜினிகாந்த தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Rajini

திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்க 25ஆம் தேதி முதல் நடைபெற்றுவந்த மீட்புப் பணியில் ஐந்தாவது நாளான இன்று 88 அடி ஆழத்திலிருந்து குழந்தையின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மணப்பாறை அரசு மருத்துவமனையில் சுஜித்தின் உடலுக்கு உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

Rajinikanth's Tweet
Rajinikanth's Tweet

இதையடுத்து புதூர் கல்லறையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு அஞ்சலி செலுத்திய பின் சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இது குறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "சுஜீத்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது, அந்தக் குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும். சுஜித்தின் பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'இனியொரு உயிர் பலியாகிவிடக்கூடாது' - ஸ்டாலின் இரங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.