சென்னை: மண்டேலா படத்தின் மூலம் சிறந்த அறிமுக இயக்குநராக விருது பெற்ற மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கடந்த மாதம் வெளியான திரைப்படம், மாவீரன். இப்படத்தில் அதிதி ஷங்கர், மிஷ்கின், யோகி பாபு, சரிதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதில் விஜய் சேதுபதி குரல் கொடுத்திருந்தது ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. தற்போது இப்படம் 25 நாட்களைக் கடந்து வசூலிலும் சாதனைப் படைத்து உள்ளது.
இந்த நிலையில், இன்று சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் மாவீரன் படத்தை ரஜினிகாந்த் பார்த்து பாராட்டியதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில், “இந்த வீடியோ நேற்றே போட்டிருக்க வேண்டும். ஆனால், காஷ்மீரில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனால் தாமதமாகிவிட்டது. மாவீரன் திரைப்படம் 25 நாட்களைக் கடந்துள்ளது. பாக்ஸ் ஆபிஸில் வெற்றி அடைந்துள்ளது. இதனை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் நன்றி.
இந்த வீடியோ இன்னொரு முக்கியமான விஷயத்தை சொல்வதற்காகத்தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாவீரன் படம் பார்த்துவிட்டு எனக்கு போன் செய்து வாழ்த்தினார். எனக்கு இது மிகவும் ஸ்பெஷல். எங்களது ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் இது ஸ்பெஷல். மாவீரன் படம் ரிலீஸ் ஆன அப்போது ரஜினிகாந்த் ஊரில் இல்லை.
இதனால் மாவீரன் பார்க்கமாட்டாரோ என்று நினைத்தேன். ஆனால், ஜெயிலர் வெளியீட்டு வேலைகள் இருந்தாலும் படம் பார்த்துவிட்டு பாராட்டினார். தலைவா நீங்கள் எப்போதும் கிரேட். போன் செய்து நீங்க நல்லா பண்ணிருக்கீங்க. ரொம்ப சூப்பரா இருந்தது. கதை வித்தியாசமாக இருந்தது. வித்தியாச வித்தியாச கதை புடிக்கிறீங்கல்ல என்று சொன்னார். ரொம்ப நன்றி தலைவா.
-
❤️❤️❤️🙏🙏🙏#Maaveeran #JAILER #SuperstarRajinikanth @rajinikanth sir #VeerameJeyam #BlockBusterMaaveeran pic.twitter.com/0EMO7yUSI2
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) August 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">❤️❤️❤️🙏🙏🙏#Maaveeran #JAILER #SuperstarRajinikanth @rajinikanth sir #VeerameJeyam #BlockBusterMaaveeran pic.twitter.com/0EMO7yUSI2
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) August 9, 2023❤️❤️❤️🙏🙏🙏#Maaveeran #JAILER #SuperstarRajinikanth @rajinikanth sir #VeerameJeyam #BlockBusterMaaveeran pic.twitter.com/0EMO7yUSI2
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) August 9, 2023
நான் உங்களின் மிகப் பெரிய ரசிகன். எத்தனை முறை எப்போது கேட்டாலும் சொல்வேன். உங்களைப் பார்த்து சினிமாவுக்கு வந்தவன். உங்களுக்குப் பேனர் வைத்து உங்கள் சினிமாக்களை கொண்டாடியவன். அப்படிப்பட்டவனின் படத்தை பார்த்து நீங்கள் போன் செய்து வாழ்த்தியது எனது வாழ்நாள் பாக்கியம்தான். நாளைக்கு ஜெயிலர் வெளியாகிறது. அனைவருக்கும் ஸ்பெஷல் டே. ரஜினிகாந்தின் சரித்திரத்தில் இன்னும் ஒரு சிறப்பான நாளாக நாளைக்கு இருக்கும். தலைவா வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம். இன்னும் நீங்கள் எங்களை மகிழ்விக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ஜெயிலர் ரிலீஸில் அதிகாலை நேரக் காட்சிகள் இல்லை... பின்னணி என்ன?