ETV Bharat / state

"நூறு சதவீதம் கப் நமதே" - நடிகர் ரஜினிகாந்த் உற்சாக பேட்டி! - thalaivar 171

இந்தியா - நியூசிலாந்து இடையேயான அரை இறுதி போட்டியில் வெற்றி பெற்றதற்கு நூறு சதவீதம் முகமது ஷமி தான் காரணம் என்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இந்தியா நிச்சயம் உலகக் கோப்பை வெல்லும் என ரஜினிகாந்த் கூறியுள்ளார்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 17, 2023, 8:03 AM IST

இந்தியா நிச்சயம் உலகக் கோப்பை வெல்லும் என ரஜினிகாந்த் கூறியுள்ளார்

சென்னை: மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் அரை இறுதிப் போட்டி நவம்பர் 15ஆம் தேதி நடைபெற்றது. அப்போட்டியை நேரடியாக பார்ப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஆகியோர், நவம்பர் 14ஆம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பை சென்றிருந்தனர்.

அங்கு பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா உடன் அமர்ந்து போட்டியைக் கண்டு ரசித்தனர். அப்போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில், அரை இறுதி போட்டியைப் பார்க்கச் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த், விமானம் மூலம் நேற்று (நவ.16) மாலை சென்னை வந்தடைந்தனர். இதனிடையே மும்பையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் வருவதை அறிந்த, இரு சிறுமிகள் உள்பட ரஜினியின் தீவிர ரசிகர்கள் பலர் சென்னை விமான நிலையத்தில் ரஜினியின் வருகைக்காக காத்திருந்தனர்.

இதையும் படிங்க: ஏப்ரலில் ரஜினி 171 படப்பிடிப்பு - லோகேஷ் கனகராஜ் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

அப்போது, ஹாசினிகா (11) மற்றும் அவரது தங்கை லட்சுமி ஸ்ரீ (9) ஆகிய சிறுமிகள், நடிகர் ரஜினிகாந்த்துக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்று, அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அதனைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், "முதலில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, சுமார் ஒன்றரை மணி நேரம் கொஞ்சம் டென்ஷன் ஆக இருந்தது. பின்னர் தொடர்ந்து விக்கெட்டுகள் வீழித்திய பிறகுதான் ஆட்டம் சுவாரஸ்யமாக மாறியது. நூறு சதவீதம் உலகக் கோப்பை நம்முடையதே" என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து, உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய முகமது ஷமி குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, அரை இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு நூறு சதவீதம் அவர்தான் காரணம் என்று பதிலளித்தார்.

இதையும் படிங்க: சூப்பர் ஸ்டார் பட்டம் பிரச்சனையில் சிக்கிய விஷ்ணு விஷால்.. 'எக்ஸ்' பதிவால் வந்த சிக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.